அன்வார் இன்னும் சொத்து விவரங்களை அறிவிக்கவில்லையா? முகைதீன் -இஸ்மாயில் அரசை விட ஒரு படி பின் தங்கிய நிலை இது!
- Shan Siva
- 28 Sep, 2024
கோலாலம்பூர், செப் 28: பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் பதவியேற்று இரண்டு ஆண்டுகள் ஆன பிறகும் இன்னும் தனது சொத்து விவரங்களை அறிவிக்காதது குறித்து பாஸ் துணைத் தலைவர் துவான் இப்ராகிம் துவான் மான் அதிர்ச்சி தெரிவித்துள்ளார்.
முந்தைய இரண்டு நிர்வாகங்களில் சுற்றுச்சூழல் மற்றும் நீர் அமைச்சராக பணியாற்றிய துவான் இப்ராஹிம், அனைத்து அமைச்சரவை உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க எம்.பி.க்கள் தங்கள் சொத்துக்களை அறிவிக்க வேண்டும் என்று கூறினார்.
ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அவ்வாறு செய்யத் தவறியது, அவர் சொல்லும் சீர்திருத்த முயற்சிகளுக்கு துரதிர்ஷ்டவசமானது என்று குபாங் கெரியன் எம்.பியுமான அவர் FMTக்கு வழங்கிய செய்தியில் தெரிவித்துள்ளார்.
முஹைதின் யாசின் அல்லது இஸ்மாயில் சப்ரி யாக்கோப் பிரதமராக அரசாங்கத்தை வழிநடத்திய போது நிலைமை எப்படி இருந்தது என்பதை ஒப்பிடுகையில் இது ஒரு படி பின்தங்கியதாகவே தோன்றுகிறது.
அரசியல்வாதிகள் தங்கள் சொத்துகளை அறிவிக்கும் எந்த நடவடிக்கையையும் எதிர்க்கும் விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் விதமாக, அன்வார் எந்த நேரத்திலும் தனது சொத்துக்களை அறிவிக்கத் தயாராக இருப்பதாக வியாழக்கிழமை தெரிவித்தை அடுத்து துவான் இப்ராஹிம் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *