அன்வார் – பேரரசர் சந்திப்பு! பூடி மடானி RON 95; ஆசியான் உச்சி மாநாடு குறித்து விளக்கம்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், செப் 25: மாட்சிமை தங்கிய மலேசிய மன்னர் சுல்தான் இப்ராஹிம் நேற்று கோலாலம்பூரின் இஸ்தானா புக்கிட் துங்குவில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உடன் ஒரு சந்திப்பை நடத்தினார். ​​பூடி மடானி RON95 மானிய முயற்சி குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ​​அடுத்த மாதம் கோலாலம்பூரில் நடைபெறவிருக்கும் 47வது ஆசியான் உச்சிமாநாட்டிற்கான நாட்டின் தயாரிப்புகள் குறித்தும் பிரதமர் மன்னருக்கு விளக்கினார்.

தென்கிழக்கு ஆசிய நாடுகளைச் சேர்ந்த தலைவர்களை ஒன்றிணைக்கும் இந்த உச்சிமாநாடு, பிராந்திய ஒத்துழைப்பு, பொருளாதார மேம்பாடு மற்றும் ஆசியான் பிராந்தியத்தை பாதிக்கும் தற்போதைய புவிசார் அரசியல் பிரச்சினைகள் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படும் ஒரு முக்கிய இராஜதந்திர நிகழ்வு என்பது குறிப்பிடத்தக்கது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *