திமோர் லெஸ்தேவில் அன்வார்
- Shan Siva
- 23 Sep, 2025
கோலாலம்பூர், செப் 23: பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், திமோர்-லெஸ்தே ஜனநாயகக் குடியரசிற்கு இரண்டு
நாள் அதிகாரப்பூர்வ பயணமாக விஜயம் செய்துள்ளார்.
பிரதமர் கே ராலா
சனானா குஸ்மாவோவின் அழைப்பின் பேரில், இந்த விஜயம், இருதரப்பு
உறவுகளை வலுப்படுத்துவதிலும், ஆசியானின் 11வது
உறுப்பினராக திமோர்-லெஸ்தேவின் முயற்சியை ஆதரிப்பதிலும் கவனம் செலுத்தும் என்று
அன்வார் ஒரு பேஸ்புக் பதிவில் தெரிவித்தார்.
இருதரப்பு
உறவுகளை வலுப்படுத்துவதற்கும், 11வது ஆசியான்
உறுப்பினராக திமோர்-லெஸ்தேவின் தயார்நிலையை ஆதரிப்பதற்கும் இந்த விஜயம்
முக்கியமானது. திட்டமிடப்பட்ட அனைத்து ஏற்பாடுகளும் சுமூகமாக நடைபெற்று இரு
நாடுகளுக்கும் பயனளிக்கட்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



