அன்வார் நம்மை நேசிக்கிறார்! - ஜாஹிட்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜன 18: பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அம்னோ முன்வைத்த அனைத்து கோரிக்கைகளையும்  நிறைவேற்றுவது சாத்தியமற்றது என்று டத்தோஸ்ரீ டாக்டர் அஹ்மத் ஜாஹிட் ஹமிடி கூறினார்.

 79வது அம்னோ பேராளர் மாநாட்டில் தனது இறுதி உரையில்,  அன்வார் ஒருபோதும் ஒற்றுமை அரசாங்கத்தில் அம்னோவை ஓரங்கட்டியதில்லை என்று ஜாஹிட் கூறினார்.

அன்வார் நம்மை  நேசிக்கிறார் என்பதை அறிந்து கொள்ளுங்கள் என்று அவர் கூறினார்.

எல்லாத் தேவைகளையும் நிறைவேற்றுவது சாத்தியமற்றது. இருப்பினும், நிர்ணயிக்கப்பட்ட ஒதுக்கீடுகளின்படி நமது கோரிக்கைகளை நிறைவேற்ற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்என்று ஜாஹிட் கூறினார்.

அம்னோ உச்ச மன்ற உறுப்பினர் டத்தோ நூர் ஜஸ்லான் யாகூப் ஃபெல்க்ரா பெர்ஹாட் தலைவராகவும், டத்தோஸ்ரீ அகமது ஷபரி சீக் ஃபெல்டா தலைவராகவும் நியமிக்கப்பட்டபோது இது நிரூபிக்கப்பட்டது என்று அவர் கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *