தமிழ் ஊடகவியாளர்கள் உடன் அன்வார் சந்திப்பு!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், அக் 17:

இந்திய சமூகத்திற்கு பயனளிக்கும் வகையில் RM 4 கோடியே 22 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள புதிய முயற்சிகளை அரசாங்கம் வழங்கி வருவதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
பெராந்தி சிஸ்வா திட்டத்தின் கீழ் இலவச கல்வித் திட்டங்கள் மற்றும் மடிக்கணினிகள் விநியோகம், மலேசிய இந்திய சமூக மாற்றப் பிரிவின் (மித்ரா) கீழ் பள்ளி பழுதுபார்க்கும் திட்டங்கள் ஆகியவை இதில் அடங்கும் என்று அவர் கூறினார்.

நேற்று பிரிக்ஃபீல்ட்ஸில் உள்ள மெட்ராஸ் பேக்கரியில் தமிழ் ஊடகவியாளர்கள் உடனான சந்திப்பின் போது அன்வார் இந்த முயற்சிகள் குறித்த விவரங்களைப் பகிர்ந்து கொண்டார்.தீபாவளி கொண்டாட்டங்களுக்கு முன்னதாக இந்து சமூகத்தின் தயாரிப்புகளைக் கவனிக்க லிட்டில் இந்தியா, பிரிக்ஃபீல்ட்ஸ் சென்று மக்களைச் சந்தித்து மகிழ்ந்ததாக அவர் தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

தேநீர் அருந்தவும், தற்போதைய பிரச்சினைகள் குறித்து பங்கேற்பாளர்களுடன் கருத்துகளைப் பரிமாறிக் கொள்ளவும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டதாக அவர் பதிவிட்டுள்ளார்.இந்த ஆண்டு தீபாவளி கொண்டாட்டம் மகிழ்ச்சி, நன்றியுணர்வு மற்றும் ஒற்றுமையின் உணர்வால் நிரப்பப்படட்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *