அன்வார் ஓய்வு பெறத் தயாராக இல்லை.. 16வது பொதுத்தேர்தலில் காத்திருக்கு ஆபத்து! - கைரி

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஆக 12: அடுத்த பொதுத் தேர்தலுக்கு (GE16) முன்னதாக, பிரதமர் அன்வார் இப்ராஹிம் தனது தற்போதைய பல கூட்டணி உத்தியைத் தக்கவைத்துக்கொள்வதா அல்லது பக்காத்தான் ஹராப்பான் (PH) உடன் தனிப் பாதையைத் தொடருவதா என்ற முக்கியமான கேள்வியை எதிர்கொள்கிறார் என்று முன்னாள் அமைச்சர் கைரி ஜமாலுதீன் தெரிவித்துள்ளார்.

தனியாகச் செல்வது தீபகற்ப மலேசியாவில் வெல்ல அனுமதிக்கும் அதே வேளையில், சபா மற்றும் சரவாக்கில் அதிகாரத்தைப் பெறுவது பரந்த கூட்டணிகள் இல்லாமல் நிச்சயமற்றதாகவே உள்ளது என்று கைரி கூறினார்.

அன்வார் ஓய்வு பெறத் தயாராக இல்லை என்று தாம் நினைப்பதாகக் குறிப்பிட்ட கைரி, அவர் இன்னும் ஆரோக்கியமாக இருக்கிறார், இரண்டாவது பதவிக்காலத்தில் முடிக்க வேண்டிய, முடிக்கப்படாத வேலைகள் அவருக்கு இருக்கிறது என்று சுட்டிக்காட்டினார்.

16-து பொதுத் தேர்தலில்  பாரிசான் நேஷனல் (BN), மற்றும் பெரிகாத்தான் நேஷனல் (PN) இடையேயான மும்முனைப் போட்டி மிகப்பெரிய ஆபத்துகளைக் கொண்டிருக்கும் என்று கைரி மேலும் கூறினார்.

நேரடிப் போட்டிகளிலும் கூட, BN ஆதரவாளர்கள் சில தொகுதிகளில் PN வேட்பாளர்களை ஆதரிக்கத் தேர்வுசெய்யலாம். குறிப்பாக DAP உடனான தற்போதைய சூழலைக் கருத்தில் கொண்டு அவ்வாறு நடக்கலாம் என்று அவர் கூறினார்.

PAS மீதான எதிர்ப்பால் உந்தப்பட்ட PH வாக்காளர்கள், PN ஐ விட BN க்கு வாக்குகளை மாற்ற அதிக விருப்பத்துடன் இருக்கலாம் என்று கைரி கூறினார்.

அடிமட்ட உறுப்பினர்களிடையே நெருக்கமான உறவுகள்தான் தீர்வு என்று அவர் கூறினார்.

அடிமட்டத்தில்… பல நேரங்களில், நேரடி உறவுகள் இல்லை. எனவே அவர்கள் எதிரிகளைப் போன்றவர்கள். அங்குதான் வாக்கு பரிமாற்றம் ஒரு பிரச்சனையாகிறது. அதில் செய்ய வேண்டிய பணிகள் ஏராளம்  என்று அவர் கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *