மலேசியாவில் இந்தியாவின் ஐஐடி கல்லூரி-அன்வார், மோடி விவாதித்தனர்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூலை 8-

மலேசியாவில் இந்திய தொழில்நுட்பக் கல்லூரியை (ஐஐடி) நிர்மாணிக்கும் ஒரு பரிந்துரை குறித்து பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் விவாதித்தனர். பிரேசில் நாட்டில் நடைபெற்றுவரும் பிரிக்ஸ் உச்சநிலை மாநாட்டின் இடைவேளையில் அவர்கள் இதனை விவாதித்தனர். ஐஐடி கல்லூரிகள் இந்தியாவின் முதன்மை நிலை பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்விக்கழகங்கள் ஆகும் . உயர்தொழில்திறன் வாய்ந்த பட்டதாரிகளை அக்கல்லூரிகள் உருவாக்குகின்றன.

பிரிக்ஸ் தலைவர்கள் உச்சநிலை மாநாட்டின் இடைவேளையில் சந்திப்புகள் நடைபெறவுள்ளன. பிரிக்ஸ் உச்சநிலை மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சனிக்கிழமையன்று ரியோடி ஜெனிரோ வந்தடைந்த அன்வார், அந்த உச்சநிலை மாநாட்டில் தேசிய உரை நிகழ்த்திய பின்னர் மியூசியம் ஆஃப் மாடர்ன் ஆர்ட் கட்டடத் தொகுதியில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசினார்.

கடந்தாண்டு லாவோஸ் நாட்டில் நடைபெற்ற இருபத்தொன்றாவது ஆசியான்- இந்தியா உச்சநிலை மாநாட்டில் அவ்விரு தலைவர்களும் சந்தித்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.அதன் பின்னர், பிரதமர் அன்வார் எதியோப்பிய பிரதமர் அபி அகமதுவைச் சந்திப்பார்.அவ்விரு கூட்டங்களுக்கும் அன்வாருடன் போக்குவரத்து அமைச்சர் ஆண்டனி லோக் மற்றும் முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் தெங்கு டத்தோஸ்ரீ
ஸஃப்ருல் அப்துல் அஸிஸ் ஆகியோரும் உடன் செல்வர்.

பிரேசிலின் இரண்டாவது பெரிய நகரான ரியோடி ஜெனிரோவில் எம்பிரர் எனும் விமானத் தயாரிப்பு நிறுவனத்தின் தலைவரும் தலைமை செயல் அதிகாரியுமான பிரான்ஸ்கோ கோமஸ் நெட்டோவையும் அன்வார் இன்று சந்திக்கவுள்ளார். பிரேசிலைத் தலைநகராக கொண்ட அந்நிறுவனம் தனது விமானங்களை கடந்த மே மாதம் லங்காவியில் நடைபெற்ற “லீமா 2025" கண்காட்சியில் காட்சிக்கு வைத்திருந்தது.

பிரிக்ஸ் அமைப்பின் ஒரு பங்காளி நாடு எனும் வகையிலும் ஆசியான் அமைப்பின் நடப்புத் தலைவர் எனும் வகையிலும் பிரிக்ஸ் மலேசியா பங்கெடுத்துள்ளது,இவ்வாண்டு ஜனவரி முதல் தேதியன்று பிரிக்ஸ் அமைப்பில் ஒரு பங்காளி நாடாக மலேசியா அதிகாரப்பூர்வமாக சேர்த்துக் கொள்ளப்பட்டது.

Perdana Menteri Anwar Ibrahim berbincang dengan Perdana Menteri India, Narendra Modi mengenai cadangan penubuhan kampus IIT di Malaysia. Pertemuan itu diadakan semasa Sidang Kemuncak BRICS di Brazil. Anwar turut bertemu pemimpin Ethiopia serta CEO syarikat penerbangan Brazil, Embraer.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *