அமைச்சர்கள் - துணை அமைச்சர்களின் வெளிநாட்டுப் பயணங்களைத் தற்காலிகமாக நிறுத்த அன்வார் உத்தரவு!

top-news
FREE WEBSITE AD

புத்ராஜெயா, செப். 11-

2026 வரவு செலவுத் திட்டம், 47ஆவது ஆசியான் உச்சநிலை மாநாட்டிற்கான முன்னேற்பாடுகளில் முழு கவனம் செலுத்தப்படுவதை உறுதி செய்வதற்காக அமைச்சர்கள், துணை அமைச்சர்களின் அனைத்து வெளிநாட்டுப் பயணங்களையும் தற்காலிகமாக நிறுத்தும்படி. பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று உத்தரவிட்டார்.

இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்தாலும், முன்னதாக திட்டமிடப்பட்டிருந்த கூட்டங்கள் அல்லது சந்திப்புகள், அமைச்சரவையால் பரிசீலிக்கப்பட்டு, விலக்களிக்கப்படுவதாக தொடர்புஅமைச்சர் டத்தோ ஃபாஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.

அமைச்சர்கள் பல திட்டங்களை செயல்படுத்துவதில் கவனம் செலுத்தி முன்னுரிமை அளிப்பதை இது உறுதி செய்வதோடு, வரும் அக்டோபர் 10ஆம் தேதி பிரதமரால் தாக்கல் செய்யப்படும் 2026 வரவு செலவுத் திட்டத்திற்கான முன்னேற்பாடுகளையும், அக்டோபர் இறுதியில் நடைபெறும் ஆசியான் உச்சநிலை மாநாட்டிற்கான தயாரிப்புகளையும் உறுதி செய்வதாகும். எனவே, இம்முடிவு உடனடியாக நடைமுறைக்கு வரும்." என்றார் அவர்.

நேற்று புத்ராஜெயாவில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்திற்குப் பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய மடானி அரசாங்கத்தின் பேச்சாளருமான அவர் அவ்வாறு கூறினார்.வரும் அக்டோபர் 10ஆம் தேதி 2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தாக்கல் செய்யப்படும்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *