மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் சந்திப்பு! வெள்ளப் பேரிடர் பாதிப்பு தொடர்பாக விவாதம்!
- Muthu Kumar
- 04 Dec, 2025
மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையிலான தேசிய நீர் மேலாண்மையின் கொள்கைகள் மற்றும் வழிகாட்டுதலை ஒருங்கிணைக்கும் வகையில் 7வது தேசிய நீர் கவுன்சில் கூட்டம் நடைபெற்றதாகவும், அதில் தாம் தலைமை தாங்கியதாகவவும் பிரதமர் அன்வார் இப்ராஹிம் தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
பல மாநிலங்களை பாதித்து வரும் வெள்ளச் சூழலில் தற்போதைய நிலை குறித்தும் அக்கூட்டத்தில் பதிவு செய்யப்பட்டதாகவும், மேலும் இந்தப் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ உறுதிபூண்டுள்ள மத்திய மற்றும் மாநில மட்டங்களில் உள்ள அனைத்து முன்னணிப் பணியாளர்களுக்கும் மிகுந்த பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
வெள்ளத் தணிப்புத் திட்டங்களை நெருக்கமாகக் கண்காணித்தல் மற்றும் உடனடியாக செயல்படுத்துதல் உள்ளிட்ட விரிவான தீர்வுகளை உருவாக்குவதற்கான ஒத்துழைப்பை தொடர்ந்து வலுப்படுத்துவோம் என்று உறுதியளித்தார்.நாடு முழுவதும் அணை செயல்பாடுகள் மற்றும் நீர்வள மேலாண்மையின் நிலை குறித்தும் கூட்டத்தில் விரிவான விளக்கமும் வழங்கப்பட்டதாக அன்வார் கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



