இந்தியர்கள் புறக்கணிக்கப்பட மாட்டார்கள் அன்வார் வாக்குறுதி!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஆக. 1-

இந்தியர்கள் குறிப்பாக அவர்கள் மத்தியில் உள்ள குறைந்த வருமானம் பெறுவோரின் தேவைகள் நாட்டின் மேம்பாட்டு நீரோட்டத்தில் இருந்து புறக்கணிக்கப்படாது. அவர்களுக்கான கல்வி, தொழில்துறை மற்றும் வீட்டு வசதி ஆகியவற்றை உள்ளடக்கிய சமூகப் பொருளாதார நிலையை மேம்படுத்த ஒரு முழுமையான அணுகுமுறை மேற்கொள்ளப்படும்.

“இந்திய சமூகத்திற்கான தொழில் வாய்ப்புகளை மேம்படுத்துவதற்காக, ஸ்டெம் மற்றும் டிவெட் உட்பட கல்வி மற்றும் திறமை மேம்பாட்டில் கவனம் செலுத்தும் முயற்சிகளும் திட்டங்களும் செயல்படுத்தப்படும்" என்று, மக்களவையில் நேற்று வியாழக்கிழமை 13ஆவது மலேசியத் திட்டத்தை தாக்கல் செய்தபோது, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வாக்குறுதி அளித்தார்.

பழுதடைந்துள்ள இந்தியர்களின் வீடுகளை பழுது பார்க்கும் மற்றும் அச்சமூகத்தின் நிர்வாக முறையை வலுப்படுத்தும் முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்றும், நிதி அமைச்சருமான அன்வார் தெரிவித்தார். "பெண்கள், இளைஞர்கள் மற்றும் மூத்த குடிமக்கள் உட்பட இந்திய மற்றும் சீன சமூகத்தின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும் சமூகக் கட்டமைப்பை மேம்படுத்தவும் பொது அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும்" என்று அன்வார் குறிப்பிட்டார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *