இரு தரப்பினருக்கும் மத்தியஸ்தம் செய்ய தயார்- அன்வார்!

top-news
FREE WEBSITE AD

பாச்சோக், ஆக் 9:

தெற்கு தாய்லாந்தில் நிலவும் மோதலுக்கு மத்தியஸ்தம் செய்யவும், இரு தரப்பினருக்கும் இடையிலான பதற்றத்தை முடிவுக்குக் கொண்டுவரவும் மலேசியா தயாராக உள்ளது என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

தெற்கு தாய்லாந்தில் உள்ள பிரச்சினை தாய்லாந்து அரசாங்கத்தின் உள் விவகாரம் தொடர்பாக அவர்களைத் தாம் தொடர்பு கொண்டுள்ளதாகவும், அவர்கள் அங்கு பதற்றத்தை, குறிப்பாக இரு தரப்பிலும் வன்முறையை நிறுத்த தொடர்ந்து முயற்சி செய்ய விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் அன்வார் கூறினார்.

நேற்று தாமான் ஸ்ரீ செம்பாகாவில் மாணவர்களுடன் நடைபெற்ற நல்லெண்ணக் கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி, தாய்லாந்தின் தெற்குப் பகுதியில் உள்ள முஸ்லிம் குடியிருப்பாளர்கள், கடந்த சில தசாப்தங்களாக நீடித்த மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு ஒரு சமாதானத் தூதராகப் பங்கு வகிக்குமாறு அன்வாரை கேட்டுக் கொண்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *