அன்வாருக்கு துருக்கியின் உயரிய அரச விருது!

top-news
FREE WEBSITE AD

அங்காரா, ஜன 8: பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிமுக்கு, துருக்கியின் உயரிய அரச விருதுகளில் ஒன்றான ஆர்டர் ஆஃப் த ரிபப்ளிக்” விருது வழங்கப்பட்டுள்ளது.

இந்த விருதை துருக்கி ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்தோகான் நேரடியாக வழங்கினார்.
மலேசியா–துருக்கி ஆகிய இரு நாடுகளுக்கிடையேயான நீண்டகால நட்பு, நெருக்கமான உறவு மற்றும் இருதரப்பு ஒத்துழைப்பை அங்கீகரிக்கும் அடையாளமாக இந்த விருது வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விருது, தூதரகம், பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் வளர்ச்சி உள்ளிட்ட பல துறைகளில் மலேசியா தொடர்ந்து வழங்கி வரும் ஒத்துழைப்பை துருக்கி மதிப்பதாகவும் பிரதிபலிக்கிறது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த பிரதமர் அன்வார் இப்ராகிம்,
இந்த விருது தனக்கு அல்ல, மலேசிய மக்களுக்கே உரியது என்று கூறினார்.

இந்த விருதை மிகுந்த பணிவுடனும் நன்றியுடனும் ஏற்றுக்கொள்வதாகக் குறிப்பிட்ட அவர்,  இது தனிப்பட்ட மரியாதை அல்ல, மலேசிய மக்களுக்கான அங்கீகாரம் என தெரிவித்தார்.

மேலும், இந்த விருது மலேசியா–துருக்கி நட்புறவை மேலும் வலுப்படுத்தி, இரு நாடுகளின் மக்களுக்கு நேரடி பயன் அளிக்கும் வகையில் ஒத்துழைப்பை விரிவுபடுத்தும் ஊக்கமாக அமையும் என்ற நம்பிக்கையையும் அவர் வெளியிட்டார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *