அன்வார் அரச மன்னிப்பு விவகாரம் பேரரசரின் மன்னிப்பு மறு பரிசீலனை செய்யப்பட வேண்டும்! - மகாதிர்

top-news
FREE WEBSITE AD

ஷா ஆலம், ஆக 18: பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் 2018 ஆம் ஆண்டு அரச மன்னிப்பு வழங்கியது, சட்டப்பூர்வமாக அந்த பதவிக்கு தகுதி பெறவில்லை என்று உறுதியானால் அவர் பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் மகாதிர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அன்வாருக்கு மாட்சிமை தங்கிய 15-வது மாமன்னர் வழங்கிய முழு மன்னிப்பை மறுபரிசீலனை செய்ய மகாதீர் அழைப்பு விடுத்தார்.

2018 ஆம் ஆண்டு மகாதிர் இரண்டாவது முறையாக பிரதமரானபோது அன்வாருக்கு முழு மன்னிப்பு வழங்கப்பட்டது.

அன்வாரின் மன்னிப்பு பற்றி தாம் படித்திருப்பதாகவும், அதில் சில சந்தேகங்கள் இருப்பதாகத் தெரிகிறது என்று மகாதிர் அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

எனவே, அது குறித்து முடிவு செய்யப்பட வேண்டும் தாம் நினைப்பதாகவும், அபப்டி அவர் தகுதியற்றவர் என்று கண்டறியப்பட்டால், நிச்சயமாக, அவர் பதவி விலக வேண்டும், பிரதமராக இருக்கக்கூடாது என்றும் மகாதிர் வலியுறுத்தினார்.

ஆனால் அவர் பிரதமராக இருந்தாலும் இல்லாவிட்டாலும், தனது வழக்கு தொடர்கிறது என்று  மகாதிர் அன்வார் மீதான தனது RM150 மில்லியன் அவதூறு வழக்கைக் குறிப்பிட்டு கூறினார்.

கடந்த வாரம், அன்வாரின் அரச மன்னிப்பு, நாடாளுமன்ற உறுப்பினராகவும் பிரதமராகவும் பணியாற்றுவதற்கான அவரது தகுதியை மீட்டெடுத்ததாக சட்டத்துறை தலைமை அலுவலகம் கூறியதை அடுத்து மகாதிரி இந்தக் கூற்று வெளியாகியுள்ளது.

 நவம்பர் 19, 2022 அன்று தம்புன் நாடாளுமன்ற உறுப்பினராக அன்வார் தேர்ந்தெடுக்கப்பட்டதையும், ஐந்து நாட்களுக்குப் பிறகு அவர் பிரதமராக நியமிக்கப்பட்டதையும் ரத்து செய்யக் கோரி வழக்கறிஞரும் முன்னாள் அமைச்சருமான பி. வேத மூர்த்தி தாக்கல் செய்த வழக்கில், சட்டத்துறை தலைமை அலுவலகம் இவ்வாறு கூறியது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *