இஸ்லாமிய உலகம் வலுவாக இருக்க வேண்டும்! - அன்வார்!

top-news
FREE WEBSITE AD

புக்கிட் மெர்தஜாம்:

இஸ்ரேல் பாலஸ்தீன மக்களுக்கு எதிராக தொடர்ந்து நடத்தி வரும் அட்டூழியங்களை எதிர்கொள்வதில் வலுவாகவும் ஒற்றுமையாகவும் இருக்குமாறு பிரதமர் அன்வார் இப்ராஹிம் மீண்டும் இஸ்லாமிய நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

கத்தாரின் தோஹாவில் நடந்த அரபு-இஸ்லாமிய உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட பிறகு நேற்று மலேசியா திரும்பிய அன்வார், உச்சிமாநாட்டில் தனது தேசிய அறிக்கையின் போது இந்த செய்தியை உறுதியாக வழங்கியதாகக் கூறினார். உலகளாவிய சவால்களை எதிர்கொள்ளும் போது முஸ்லிம் உலகம் மீள்தன்மையுடன் நிற்கவும் ஒடுக்கப்பட்ட பாலஸ்தீனியர்களின் கண்ணியத்தை நிலைநிறுத்தவும் முடியும் என்பதை அவர் வலியுறுத்தினார்.

தோஹாவில் நடந்த ஒரு சிறப்பு உச்சிமாநாட்டிலிருந்து தாம் திரும்பி வருவதாக கூறிய அவர், அங்கு இஸ்லாமிய மற்றும் அரபுத் தலைவர்கள் சியோனிச இஸ்ரேலிய ஆட்சியின் தொடர்ச்சியான வன்முறை, மிருகத்தனம் மற்றும் அட்டூழியங்கள் குறித்து விவாதித்தாக தெரிவித்தார். மலேசியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தி, இஸ்லாமிய உலகம் வலுவாக இருக்க வேண்டும் என்ற உறுதியான நிலைப்பாட்டை தாம் அங்கு தெரிவித்ததாகக் கூறினார்.நாம் வலிமையை வளர்த்துக் கொள்ள வேண்டும்," என்று அவர் நேற்று செபராங் பிறை பாலிடெக்னிக்கில்  நடந்த மடானி நிகழ்ச்சியில் கூறினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *