"தூருன் அன்வார்” பேரணிக்கு இடையூறு ஏற்படக்கூடாது-போலீஸுக்கு அன்வார் வலியுறுத்தல்!
- Muthu Kumar
- 25 Jul, 2025
கோலாலம்பூர், ஜூலை 25-
நாளை சனிக்கிழமை நடைபெறவிருக்கும் "தூருன் அன்வார் பேரணிக்கு இடையூறும் அச்சுறுத்தலும் ஏற்படாமல் இருப்பதை உறுதிசெய்யும்படி அரச மலேசியப் போலீஸ்படைக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உத்தரவிட்டுள்ளார்.
நாட்டின் ஜனநாயக சுதந்திரத்தை நிலைநிறுத்தும் தமது கடப்பாட்டை இது பிரதிபலிக்கும் என்று அவர் குறிப்பிட்டார். பொதுப் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்பதையும் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தும் குடிமக்களின் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என்பதையும் அன்வார் வலியுறுத்தியுள்ளார் என்று அவரின் மூத்த பத்திரிகைச் செயலாளர் துங்கு நஷ்ருல் அபாய்டா குறிப்பிட்டார்.
பாஸ் தலைமையிலான பேரணி சீராக நடைபெறுவதற்கு தேவையான ஒத்துழைப்பு வழங்கும்படி போலீஸூக்கு பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.சட்டத்திற்கு ஏற்புடைய வகையிலும் அமைதியான முறையிலும் அது நடைபெறுவதை அவர்கள் உறுதிசெய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார் என்றார் நஷ்ருல் கூறினார்.
அன்வாரைப் பதவியை விட்டு விலக வைக்கும் நோக்கத்துடன் அப்பேரணி நடைபெறுகிறது. அதில் மூன்று லட்சம் பேர் வரை கலந்துகொள்வார்கள் என்று பாஸ் கட்சி தெரிவித்துள்ளது. ஆனால், சுமார் பதினைந்தாயிரம் பேர் மட்டுமே அதில் கலந்து கொள்வார்கள் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



