அன்வாருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் விரைவில் கொண்டு வரப்படலாம்!
- Muthu Kumar
- 27 Jul, 2025
கோலாலம்பூர், ஜூலை 27 -
பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு எதிராக மக்களவையில் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் ஒன்று விரைவில் தாக்கல் செய்யப்படக் கூடிய சாத்தியம் இருப்பதை, எதிர்க்கட்சித் தலைவர் டத்தோ ஸ்ரீ ஹம்ஸா ஸைனுடின் கோடிகாட்டியுள்ளார்.
"சற்று காத்திருங்கள்.பின்னர் நாங்கள் தாக்கல் செய்வோம். இதை ஏன் நாங்கள் இப்போது வெளிப்படுத்த வேண்டும்? என்று, பாஸ் கட்சித் தலைமையில் கோலாலம்பூரில் நேற்று நடத்தப்பட்ட பேரணிக்கு மத்தியில் ஹம்ஸா தெரிவித்தார்.
நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை தாக்கல் செய்வது குறித்து பேசப்பட்டிருக்கிறதா என்று செய்தியாளர்கள் கேட்டபோது, அதற்கு கண் ஜாடை மூலம் அவர் பதிலளித்தார். பிரதமர் பதவியிலிருந்து தாம் விலக வேண்டும் என்ற கோரிக்கைகளுக்கு மத்தியில், மக்களவையில் தமக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்படுவதை ஒற்றுமை அரசாங்கம் தடுக்காது என்று, பக்காத்தான் ஹராப்பான் தலைவருமான அன்வார் இதற்கு முன்னர் தெரிவித்திருந்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



