சாலை வரி கட்டவில்லை! 10 சொகுசு கார்கள் பறிமுதல்!

top-news
FREE WEBSITE AD

சிரம்பான், ஆக 8: நெகிரி செம்பிலான் சாலைப் போக்குவரத்துத் துறை (JPJ) ஜனவரி முதல் 10 சொகுசு வாகனங்களை பறிமுதல் செய்துள்ளதாக அறிவித்துள்ளது. உரிமையாளர்கள் தங்கள் சாலை வரி மற்றும் காப்பீட்டைப் புதுப்பிக்கத் தவறியதைத் தொடர்ந்து இந்தப் பறிமுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லட்சக்கணக்கான ரிங்கிட் மதிப்புள்ள சில கார்களுக்கு சாலை வரி மற்றும் காப்பீடு கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக புதுப்பிக்கப்படவில்லை என்று மாநில JPJ இயக்குனர் ஹனிஃப் யூசப்ரா யூசோஃப் கூறினார்.

சாலை வரி மற்றும் காப்பீட்டைப் புதுப்பிக்க அவர்கள் ‘மறந்துவிட்டார்கள்’ என்பதே உரிமையாளர்களின் சாக்கு... இதுபோன்ற சாக்குகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்று அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறினார்.

ஒரு வாகனத்தை சொந்தமாக வைத்திருக்க முடிந்தால், அதன் காப்பீடு மற்றும் சாலை வரியைப் புதுப்பிப்பதற்காகப் பொறுப்பேற்க வேண்டும். அலட்சியமாக இருக்க முடியாது என்று அவர் சுட்டிக்காட்டினார்.

அனைத்து விதிமுறைகளுக்கும் இணங்கினால் வாகனங்கள் உரிமையாளர்களிடம் திருப்பித் தரப்படும் என்று அவர் வலியுறுத்தினார்.

சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987 மற்றும் தொடர்புடைய விதிமுறைகளின் கீழ் மேலும் விசாரணைக்காக வாகனங்கள் மாநில JPJ டிப்போவிற்கு அனுப்பப்பட்டுள்ளதாக ஹனிஃப் கூறினார்.

ஜனவரி முதல் ஜூலை வரையிலான மாநில JPJ பதிவுகளின் அடிப்படையில், சாலை வரி குற்றங்களுக்காக 10,435 வாகன ஓட்டிகள் மீதும், காப்பீடு இல்லாததற்காக 7,891 வாகன ஓட்டிகள்மீதும்  வழக்குப் பதிவு செய்யப்பட்டதாக அவர் கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *