ஐஎஸ் பயங்கரவாதச் சித்தாந்தத்தை மலேசியர்கள் எவரும் பரப்பவில்லை போலீஸ் தலைவர் அறிவிப்பு!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூலை 5-

உள்நாட்டில் ஐஎஸ் பயங்கரவாதச் சித்தாந்தத்தைப் பரப்பும் நடவடிக்கையில் மலேசியர்கள் எவரும் ஈடுபடவில்லை என்று தேசியப் போலீஸ்படைத் தலைவர் டத்தோஸ்ரீ முகமது காலிட் இஸ்மாயில் நேற்று தெரிவித்தார். பயங்கரவாதச் சித்தாந்தத்தைப் பரப்பிய குற்றச்சாட்டின் பேரில் முப்பத்தாறு வங்காளதேசிகள் அண்மையில் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் தொழிற்சாலைகளிலும் கட்டுமானம் மற்றும் சேவைத்துறைகளிலும் வேலை செய்து வந்தவர்கள் என்று அவர் விவரித்தார்.

மலேசியாவில் ஐஎஸ் சித்தாந்தத்தைப் பரப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள இதர நபர்களைத் தேடிக் கண்டுபிடிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தீவிரவாத நடவடிக்கைகளுக்குத் தளவாடங்களை வழங்கும் இடமாகவும் போக்குவரத்துப் பரிமாற்ற மையமாகவும் மலேசியா மாறாது என்பதைப் போலீசார் உறுதிப்படுத்துவார்கள் என்று காலிட் குறிப்பிட்டார்.

மலேசியாவின் அரசதந்திர உறவுகளையும் அதன் அனைத்துலக மரியாதையையும் பாதுகாப்பதற்கு இது இன்றியமையாததாகும் என்றார் அவர்.தேசியப் பாதுகாப்புக்கே உச்சகட்ட முன்னுரிமை அளிக்கப்படும். அதில் எள்ளளவும் விட்டுக் கொடுக்கும் போக்கு அனுசரிக்கப்படாது. எந்தவொரு பயங்கரவாதச் செயலாக இருந்தாலும் அதிலிருந்து மலேசியர்களையும் நாட்டையும் பாதுகாக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். நல்வாய்ப்பாக, இதுவரை எந்தவொரு மலேசியரும் பயங்கரவாதச் செயலில் ஈடுபட்டதில்லை என்று புக்கிட் அமான் கூட்டரசு பிரதேச தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் காலிட் கூறினார்.

கைதுசெய்யப்பட்ட 36 நபர்களில் ஐந்து பேர் தண்டனைச் சட்டத்தின் சாப்டர் விஐஏ எனப்படும் பயங்கரவாத ஒழிப்புச் சட்டவிதியின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். பதினைந்து பேர் நாட்டை விட்டு வெளியேற்றப்படுவதற்காக குடிநுழைவுத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். மேலும், பதினாறு பேர் மேல்விசாரணைக்காக சொஸ்மா சட்டத்தின்கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

எங்களைப் பொறுத்தமட்டில், சிறு அளவில் பயங்கரவாதச் செயலில் ஈடுபடும் வெளிநாட்டினர் தத்தம் தாயகங்களுக்கு உடனடியாகத் திருப்பி அனுப்பப்படுவார்கள். அதில் தீவிரமாக ஈடுபட்டு வருவது தெரிந்தால், நமது நாட்டின் சட்டங்களின் அடிப்படையில் குறிப்பாக சொஸ்மா சட்டத்தின்கீழ் அவர்கள் மீது குற்றம் சுமத்தப்படும் என்றும் காலிட் சொன்னார்.

பெரும்பாலும் சமூக ஊடகங்கள் வாயிலாகவே குடியேற்றத் தொழிலாளர்களை இலக்காகக் கொண்டு தீவிரவாதச் சித்தாந்தம் பரப்பப்படுகிறது. வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் செயலிகள் மூலம் நூறு முதல் நூற்று ஐம்பது பேர் இதில் ஈடுபட்டிருப்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்நபர்கள் 25 வயதுக்கும் 35 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் ஆவர். இயங்கலை வாயிலாக விசுவாச உறுதிமொழி எடுத்துக் கொண்ட பிறகு, தத்தம் குடியிருப்புப் பகுதிகளுக்கு அந்நபர்கள் தலைவர்களாக நியமிக்கப்பட்டு சிந்தாந்தத்தைப்  பரப்பும்படி பணிக்கப்படுகின்றனர் என்றார் காலிட்.

"கெராக்கான் மிலிட்டன் ரேடிகல் பங்காளதேஷ் (ஜிஎம்ஆர்பி) எனும் அக்கும்பல் ரகசியக் கூட்டங்களையும் நடத்தி வருகின்றனர். மலேசியாவில் ஐஎஸ் பயங்கரவாதக் சித்தாந்தத்தைப் பரப்புவதே அக்கும்பலின் நோக்கமாகும். அது வங்காளதேசத்தின் தீவிரவாத இயக்கமாகும்.

Ketua Polis Negara sahkan tiada rakyat Malaysia terlibat dalam penyebaran ideologi IS. Seramai 36 warga Bangladesh ditahan, lima disiasat di bawah undang-undang antikeganasan. Penyebaran ideologi berlaku melalui media sosial, terutama WhatsApp dan Telegram. Malaysia kekal tegas lindungi keselamatan negara.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *