ஹம்சாவிடமிருந்து எந்த விண்ணப்பமும் வரவில்லை! - தக்கியுதீன் ஹசான்
- Shan Siva
- 06 Apr, 2026
கோலாலம்பூர், ஏப் 6: கடந்த பிப்ரவரியில் பெர்சாத்து கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஹம்சா ஜைனுதீனிடமிருந்து, எதிர்க்கட்சிக் கூட்டணியில் சேருவதற்கான எந்த விண்ணப்பத்தையும் பெரிகாத்தான் நேஷனல் இன்னும் பெறவில்லை என்று பெரிக்காத்தான் நேஷனல் பொதுச்செயலாளர் தக்கியுதீன் ஹசான் கூறினார். இன்றுவரை, அவர் பிஎன் கூட்டணிக் கட்சிகளில் எதிலும் சேர்ந்ததற்கான எந்த அறிகுறியும் இல்லை, என்று அவர் கூறினார்.
பிஎன்-இல் அங்கம் வகிக்க விரும்பும் எவரும் நான்கு கட்சிகளில் ஒன்றில் உறுப்பினராக இருக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார். பிஎன் என்பது பெர்சாத்து பாஸ், கெராக்கான் மற்றும் மலேசிய இந்திய மக்கள் கட்சி ஆகியவற்றின் கூட்டணி என அவர் சுட்டிக்காட்டினார்.
பாஸ் கட்சியின் பொதுச்செயலாளராகவும் இருக்கும் தக்கியுதீன், ஹம்சாவும் பாஸ் கட்சியில் சேர விண்ணப்பிக்கவில்லை என்று கூறினார்.
சங்கங்களின் பதிவிலாகாவிடம் இன்னும் பதிவு செய்யப்படாத மலேசியக் கட்சியைக் (Parti Keluarga Malaysia) கைப்பற்றும் தனது ஆரம்பத் திட்டத்தைக் கைவிடுவதாக சூசகமாகத் தெரிவித்த பிறகு, தனது புதிய கட்சி மூன்று PN அங்கங்களில் ஒன்றாக இருக்கக்கூடும் என்று முன்னதாக ஹம்ஸா கூறினார்என்பது குறிப்பிடத்தக்கது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



