கிள்ளானில் படகு விபத்து! மூவர் பலி!

top-news
FREE WEBSITE AD

கிள்ளான், ஜூன் 7:  கிள்ளான் தஞ்சோங் ஹரப்பான் அருகே நேற்று நிகழ்ந்த படகு விபத்தில் ஒரு சிறு குழந்தை உட்பட மூன்று பேர் இறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள் மூன்று முதல் 50 வயதுடையவர்கள் என்று சிலாங்கூர் மலேசிய கடல்சார் அமலாக்க அமைப்பான MMEA  இயக்குனர் அப்துல் முஹைமின் சாலே தெரிவித்தார்.

மாலை 5 மணிக்கு நடந்த சம்பவத்தில், ஆறு பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்வதற்கு முன்பு கட்டுப்பாட்டை இழந்ததாக நம்பப்படுகிறது.

ஒரு மீன்பிடி படகு அதில் இருந்தவர்களை மீட்க வந்தது, ஆனால் அதன் குழுவினர் ஒருவரை மட்டுமே காப்பாற்ற முடிந்தது, இன்று காலை நிலவரப்படி மேலும் இரண்டு பயணிகள் இன்னும் காணவில்லை என்றும் அவர் கூறினார்.

காணாமல் போன இரண்டு பயணிகளைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியாளர்கள் டைவிங் பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் முஹைமின் கூறினார்!
Tanjung Harapan, Klang, mengalami tragedi apabila sebuah bot terbalik menyebabkan tiga maut termasuk seorang kanak-kanak. Enam penumpang berada dalam bot, hanya seorang diselamatkan. Dua lagi masih hilang dan operasi mencari sedang dijalankan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *