கங்கார் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு கையடக்க கருவி அன்பளிப்பு!

top-news
FREE WEBSITE AD

கங்கார், அக். 22-

பெர்லிஸ் மாநிலத்தில் உள்ள ஒரேயொரு தமிழ்ப்பள்ளியான கங்கார் தமிழ்ப்பள்ளிக்கு கல்வி அமைச்சர் ஃபட்லினா சீடேக் சிறப்பு வருகை புரிந்து அனைத்து மாணவர்களுக்கும் கையடக்க கருவி வழங்கினார்.

இவரது வருகை வரலாற்றுப்பூர்வ வருகையாகவும் மாணவர்களின் கற்றல் கற்பித்தலுக்கு புத்துணர்ச்சியூட்டும் வகையில் அமைந்துள்ளது. இப்பள்ளியில் பயிலும் 90 விழுக்காடு குறைந்த வருமானம் பெறும் குடும்ப மாணவர்களுக்கு இணையம் வழி கற்றலுக்கு ஏதுவாக இது அமைந்துள்ளது.

இவ்வேளையில் கல்வி அமைச்சுக்கும் பெர்லிஸ் மாநில கல்வித்துறைக்கும் கங்கார் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள். பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினருக்கும் தமது மனமார்ந்த நன்றியை தலைமையாசிரியர் உதயகுமார் கிருஷ்ணன் தெரிவித்துக் கொண்டார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *