மனிதவள அமைச்சின் மிசி 2.0 ஏற்பாட்டில் தொழில்திறன் பயிற்சிப் பட்டறை!

top-news
FREE WEBSITE AD

(ஆர்.ரமணி)

செபராங் ஜெயா, ஆக. 9-

மலேசிய இந்தியர்களின் திறன் மேம்பாட்டுத் துறையான MISI 2.0 (Unit Pembangunan Kemahiran India Malaysia), மனிதவள அமைச்சின் கீழ் செயல்படுபவையாக,
தொழிற்சாலைக்கான திறன் நிர்ணய பயிற்சிப் பட்டறையை செபராங் ஜெயா அருள்மிகு கருமாரியம்மன் ஆலய மண்டபத்தில் சிறப்பாக நடத்தியது.

இந்நிகழ்ச்சியை பினாங்கு மாநில வீடமைப்பு மற்றும் சுற்றுச் சூழல் துறை ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ ஸ்ரீ சுந்தரராஜு சோமு அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்து, நான்கு நான் பயிற்சியில் பங்கேற்ற 25 இந்திய இளைஞர் யுவதிகளுக்கு நற்சான்றிதழ்களை வழங்கினார்.

இந்நிகழ்வில் உரையாற்றிய அவர், "மனிதவள அமைச்சின் மூலமாக நாடு முழுவதும் நடைபெறும் தொழில்திறன் பயிற்சிகள், இந்திய இளைஞர்களுக்குச் சிறு தொழில் முனைவர்களாக உருவாகவும், தொழிற்சாலைகளில் பணியிட வாய்ப்புகளைப் பெறவும் உதவுகின்றன, என்றார்.

மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம்மின் சிறப்பு அதிகாரி டிக்கம் லூர்ட்ஸ் இதனைத் தெரிவித்தார்.. "மடானி அரசாங்கம் தலைமையில், பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இந்திய இளைஞர்களுக்காக மிகுந்த அக்கறையுடன் தொழில்திறன் பயிற்சிகள் நாடு முழுவதும் ஏற்பாடு செய்ய உத்தரவிட்டுள்ளார். இளம் தலைமுறையினர் மிசி 2.0 இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி தங்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக்கொள்ளலாம்,"" என உறுதியுடன் தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *