சமூகப்பணித் தொழில் சட்ட மசோதா - மறு மதிப்பீடு செய்யப்படும்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், நவ.8-

சமூகப்பணித் தொழில் சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் மீண்டும் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னர். அதன் கொள்கை மற்றும் செயல்படுத்தல் தேவைகளை மகளிர், குடும்ப மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சு மறு மதிப்பீடு செய்யும்.

பொதுத்துறை சமூகப் பணியாளர்களுக்கு, இச்சட்டத்தின் பயன்பாடு குறித்து அனைத்து தரப்பும் புதிய கருத்துகளை வழங்க முடியும் என்பதை உறுதிசெய்ய இந்த மறுஆய்வு அவசியம் என்று அதன் அமைச்சர் டத்தோஸ்ரீ நென்சி ஷுக்ரி தெரிவித்தார்.

சமூகப் பணியின் வரையறை மற்றும் சட்டத்தின் அதிகார வரம்பு குறித்து பல்வேறு கருத்துகள் பெறப்பட்டதை அடுத்து, பல கலந்தாலோசிப்புகளுக்குப் பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக டத்தோஸ்ரீ நென்சி ஷுக்ரி தெரிவித்தார்.

உண்மையில், மீண்டும் ஆய்வு செய்ய வேண்டும் என்று நாங்கள் ஏற்கெனவே ஒப்புக்கொண்டோம். மீண்டும் ஆய்வு எனும்போது நாம் எல்லாவற்றையும் ஆரம்பத்தில் இருந்து தொடங்க வேண்டியுள்ளது. ஏனெனில் கொள்கையை உருவாக்குபவர்கள். மாநில அரசுகள் உட்பட, அனைவரிடமும் மீண்டும் ஆலோசிக்க வேண்டும்." என்றார் மகளிர், குடும்ப மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சர் டத்தோஸ்ரீ நென்சி ஷுக்ரி

மக்களவையில், அமைச்சர்கள் கேள்வி - பதில் நேரத்தின்போது, அம்பாங் நாடாளுமன்ற உறுப்பினர் ரோட்ஷியா இஸ்மாயில் எழுப்பிய கேள்விக்கு நென்சி அவ்வாறு கூறினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *