ஸ்தாப்பாகில் காருக்குள் கிடந்த உடல்!
- Shan Siva
- 23 Sep, 2025
கோலாலம்பூர், செப் 23: ஸ்தாப்பாக்கின் டயமண்ட் சதுக்கத்தில் இன்று ஒரு காருக்குள் ஒரு உடல் கண்டெடுக்கப்பட்டதாக போலீசார் உறுதிப்படுத்தினர்.
வங்சா மாஜு
காவல்துறைத் தலைவர் முகமது லாசிம் இஸ்மாயில், இந்த விவகாரம் குறித்து தங்களுக்கு ஒரு புகார்
கிடைத்துள்ளதாகவும், பாதிக்கப்பட்டவரின்
அடையாளம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் கூறினார்.
வழக்கு இன்னும்
விசாரணையில் உள்ளது என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
உடல் கோலாலம்பூர்
மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டதாக கூறினார்.
முன்னதாக,
நகர தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை
செயல்பாட்டு மையம், வாகனத்திலிருந்து
உடலை எடுக்க உதவுமாறு அழைப்பு வந்ததாகத் தெரிவித்துள்ளது.
முன்னதாக இது தொடர்பான பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பரவியது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



