ZUS காஃபி நிறுவனம் காவல் நிலையத்தில் புகார்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், நவ 12:  வாடிக்கையாளர் ஒருவர் கடை ஊழியரை வார்த்தைகளால் திட்டி, காபியை தெளித்ததை அடுத்து, ஜூஸ் காபி நிறுவனம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது.

சம்பந்தப்பட்டவரைப் பாதுகாப்பதற்காகவும், அவரது தனியுரிமையைப் பாதுகாப்பதற்காகவும் இந்த புகார் பதிவு செய்யப்பட்டதாக உள்ளூர் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவத்திலிருந்து மீள்வதற்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறையை தங்கள் ஊழியர் எடுத்துக்கொள்வதாகவும் ஒரு அறிக்கையில் இன்று தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு வாடிக்கையாளரும் வெவ்வேறு எதிர்பார்ப்புகளுடன் வருவதை நாங்கள் அங்கீகரிக்கிறோம். இந்த வாய்ப்பிலிருந்து நாங்கள் கற்றுக்கொள்கிறோம் என்று அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

சம்பந்தப்பட்டவர்களை அடையாளம் காணக்கூடிய தகவல்களைப் பரப்புவதைத் தவிர்க்குமாறு ஜூஸ் காபி பொதுமக்களை வலியுறுத்தியது.

இந்த வார தொடக்கத்தில் ஒரு ஜூஸ் காபி ஊழியருக்கும் ஒரு வெளிநாட்டு வாடிக்கையாளருக்கும் இடையிலான மோதலைக் காட்டும் வீடியோ வைரலானது குறிப்பிடத்தக்கது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *