மருமகன் “பதுங்கி” இருக்குமிடம் முஹிடினுக்கு தெரியாமல் இருக்காது!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், அக். 26-

தமது மருமகன் முஹமட் அட்லான் பெர்ஹான் “பதுங்கி" இருக்கும் இடம் டான் ஸ்ரீ முஹிடின் யாசினுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும். அதனை  அதிகாரத் தரப்பினரிடம் தெரிவிக்க வேண்டும் என்று அந்த முன்னாள் பிரதமருக்கு வலியுறுத்தப்பட்டு உள்ளது.அட்லான் மறைந்திருக்கும் இடத்தை அடையாளம் காண சம்பந்தப்பட்ட அதிகாரத் தரப்பினருக்கு முஹிடின் உதவ வேண்டும் என்று. அமானா கட்சியின் உதவித் தலைவர் மாஹ்ஃபுஸ் ஒமார் வலியுறுத்தியுள்ளார்.

ஒரு முன்னாள் பிரதமருமான ஒரு மாமனாருக்கு தமது மருமகன் இருக்குமிடம் தெரியாமல் இருப்பது சாத்தியமற்றது என்று அவர் கூறியுள்ளார்."முஹிடின் அமைதியாக இருப்பது, அவருக்குத் தெரியாது என்று அர்த்தமாகாது. ஆனால், தமது மருமகனை அவர் பாதுகாக்க விரும்புகிறார் என்றே அர்த்தமாகும்.

“அவர் (அட்லான்) உண்மையிலேயே வெளிப்படையானவராகவும் நிரபராதியாகவும் இருந்தால், அரசியல் காரணங்களுக்குப் பின்னால் ஒளிந்து கொள்ளாமல், விசாரணைக்கு உதவ முன்வர வேண்டும்."இஸ்லாத்தின் நேர்மையையும் போராட்டத்தையும் பறைசாற்றும் தலைவர்களால் மக்கள் சலித்துப் போயிருக்கிறார்கள். ஆனால், தங்கள் சொந்தக் குடும்பம் என்று வந்து விட்டால், அவர்கள் வாயைத் திறக்காமல் கண்களை மூடிக் கொள்கிறார்கள்.

“இதுதான் நயவஞ்சக அரசியலின் உண்மையான முகம் மற்றும் ஒழுக்கத்தைப் பற்றிப் பேசுவது. தங்கள் சொந்த மக்களின் தவறுகளைப் பாதுகாக்க சதி செய்வது" என்று நேற்று சனிக்கிழமை வெளியிட்ட ஓர் அறிக்கையில் மாஹ்ஃபுஸ் தெரிவித்தார்.மலேசிய லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணையத்தின் (எம்ஏசிசி) விசாரணைக்காக தேடப்பட்டு வரும் அட்லானின் இருப்பிடத்தை அடையாளம் காண்பதில் சம்பந்தப்பட்ட அதிகாரத் தரப்பின் முயற்சி குறித்து கருத்துரைக்கும் போது மாஹ்ஃபுஸ் இதனைத் தெரிவித்தார்.

அட்லானின் கடப்பிதழ் ரத்து செய்யப்பட்டு விட்டதாக, உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைஃபுடின் நகத்தியோன் இஸ்மாயில் கடந்த வியாழக்கிழமை அறிவித்திருந்தார். ஓடி ஒளிந்து கொண்டிருக்கும், தேடப்பட்டு வரும் ஒரு வர்த்தகர் மத்திய கிழக்கு நாடொன்றில் சொகுசான வாழ்க்கையை வாழ்ந்து வருவதாக இதற்கு முன்னர் கூறப்பட்டது.

மேற்கு ஆசியாவைச் சேர்ந்த பிரபலமானவர்களுடன் அட்லான் இருப்பதைக் காட்டும் பல புகைப்படங்களை தான் பெற்றிருப்பதாக, நியூ ஸ்டிரேட்ஸ் டைய்ம்ஸ் நாளிதழ் நேற்றுமுன்தினம் செய்தி வெளியிட்டிருந்தது. கடந்த 2023ஆம் ஆண்டில் நாட்டை விட்டு ஓடி தலைமறைவான அட்லான், ஒரு மேற்கு ஆசிய நாட்டிலிருந்து தாய்லாந்து உட்பட சில நாடுகளுக்கு விடுமுறையில் சென்றிருப்பது, கோல்ப் விளையாடி இருப்பது மற்றும் குறி சுடும் பயிற்சியில் ஈடுபட்டிருந்ததாக அந்த நாளிதழ் தெரிவித்தது.

அட்லான் நாட்டை விட்டு ஓடிய பின்னர், அவரின் வழக்கறிஞர் மன்சோர் சாட்டும் நாட்டை விட்டு தப்பி ஓடியிருக்கின்றார். தற்போது அவர்கள் இருவரும் தேடப்படும் நபர்கள் பட்டியலில் இடம் பெற்றிருக்கின்றனர். இந்த விசயத்தில் விசாரணைக்கு முட்டுக் கட்டையாக இருப்பதும் முக்கியமான தகவல்களை மறைத்து வைத்திருப்பதும் நிரூபிக்கப்பட்டால், அதன் தொடர்பிலான சட்டத்தின் கீழ் முஹிடின் மீதும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று மாஹ்ஃபுஸ் வலியுறுத்தினார்.

"மற்றவர்கள் சம்பந்தப்பட்டிருந்தால், நேர்மையைப் பற்றி முஹிடின் பேசுகிறார். தமது மருமகன் சம்பந்தப்பட்டிருப்பதால், அவர் வாய் திறக்காமல் இருக்கின்றார்" என்று மாஹ்ஃபுஸ் குற்றஞ்சாட்டினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *