மீண்டும் அம்னோவில் நோ ஒமார்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூன் 8: முன்னாள்  அமைச்சரும், சிலாங்கூர் அம்னோவின் முன்னாள் தலைவருமான நோ ஒமார், கட்சி தன்னை நீக்கிய மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அக்கட்சியில் இணைந்துள்ளதாகக் கூறியுள்ளார்.


அம்னோவின் முன்னாள் உச்ச மன்ற உறுப்பினரான அவர், கட்சிக்குத் திரும்ப அல்லது கட்சியில் சேர விரும்பும் எவருக்கும் அதன் கதவுகளைத் திறக்கும் 'ருமா பங்சா' (Rumah Bangsa) முன்முயற்சியின் கீழ் கட்சியில் மீண்டும் இணைந்ததாக தெரிவித்துள்ளார்.


ஜொகூர் அம்னோ மற்றும் பாரிசான் நேஷனல் கட்சிகள் கடைப்பிடிக்கும் கொள்கைகளான, அதாவது டிஏபி-யுடன்  இணைந்து செயல்படக்கூடாது என்ற கொள்கையே, கட்சியில் மீண்டும் இணைய தன்னைத் தூண்டியது என்று நோ குறிப்பிட்டுள்ளார்.


15வது பொதுத் தேர்தலின் போது கட்சி ஒழுக்கத்தை மீறியதைத் தொடர்ந்து, நோ கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். ஜூலை 2024-ல், அவர் பெர்சாத்து கட்சியில் இணைந்ததை உறுதிசெய்தார், 


ஹம்சா ஜைனுதீன் உட்பட 17 கட்சித் தலைவர்கள் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த மாதம் அவர்  விலகினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *