ஜொகூர் பொருளாதாரத்தைவிட இரண்டு மடங்கு அதிகம்; சிலாங்கூரின் வளர்ச்சி! - அமிருதின் ஷாரி
- Shan Siva
- 03 Jul, 2026
ஜொகூர் பாரு, ஜூலை 3: கூட்டரசு அரசாங்கம், பினாங்கு மற்றும் சிலாங்கூர் மாநில
அரசாங்கங்களுடன் இணைந்து,
வலுவான பொருளாதார வளர்ச்சியை வழங்குவதன் மூலம் பக்காத்தான் ஹரப்பானின்
தலைமையின் வலிமையை வெளிப்படுத்தியுள்ளது என்று பக்காத்தான் ஹரப்பான் உச்ச மன்ற
உறுப்பினர் அமிருதின் ஷாரி இன்று கூறினார்.
பக்காத்தான் ஹரப்பான் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் தலைமையிலான மடானி
அரசாங்கம், உலகளாவிய பொருளாதார
சவால்களுக்கு எதிரான நாட்டின் மீள்திறனைக் கட்டியெழுப்பியதோடு, ரிங்கிட்டை 16 ஆண்டுகளில் இல்லாத உச்ச நிலைக்கு
வலுப்படுத்தியுள்ளது என்று சிலாங்கூர் மந்திரி பெசாருமான அமிருடீன் கூறினார்.
பிரதமர் அன்வர் இப்ராஹிம் தலைமையிலான நிர்வாகம் அதிக அளவிலான முதலீடுகளை
ஈர்த்ததோடு, நாட்டின் மொத்த
உள்நாட்டு உற்பத்தியில் சீரான வளர்ச்சியையும் பதிவு செய்துள்ளது என்றும் அவர்
கூறினார்.
மாநில அளவில், பினாங்கு மற்றும்
சிலாங்கூர் ஆகியவை கூட்டாக தேசியப் பொருளாதாரத்தில் கிட்டத்தட்ட 40% பங்களிக்கின்றன.
கடந்த ஆண்டு புள்ளியியல் துறையின் மதிப்பீட்டில் சிலாங்கூரின் பொருளாதாரம் RM432 பில்லியன் என மதிப்பிடப்பட்டது.
இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட சமீபத்திய அறிக்கை, அது RM28 பில்லியன் அதிகரித்து RM460 பில்லியனாக உயர்ந்துள்ளது என்பதைக் காட்டுகிறது. இது
ஜொகூரின் பொருளாதாரத்தை விட இரண்டு மடங்கு பெரியது என்று அவர் ஜொகூர்
மாநிலத் தேர்தலுக்கான பக்காத்தான் ஹராப்பானின் தேர்தல் அறிக்கை வெளியீட்டு
விழாவில் கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



