முகநூல் வாயிலான வேலையினை நம்பி, ஜொகூர் இன்ஷூரன்ஸ் பெண் அதிகாரி வெ.54,950.59 ஐ இழந்தார்!

- Muthu Kumar
- 11 Jun, 2025
(கோகி கருணாநிதி)
ஜொகூர், ஜூன் 11-
சமூகவலைதளமான முகநூலில் தரப்பட்டுள்ள மிதமிஞ்சிய லாபம் வாக்குறுதிக்கே சென்று, வேலையின் பெயரில் மோசடிக்குள்ளாகி, ஜொகூர் ஸ்ரீ ஆலம் பகுதியை சேர்ந்த அதிகாரி 32 வயது பெண் அதிகாரி,மொத்தம் வெ.54,950.59ஐ இழந்ததைக் கூறி போலீசில் புகார் அளித்துள்ளார்.
இந்த சம்பவம் மே 30ஆம் தேதி தொடங்கியது. சமூக வலைதளமான பேஸ்புக்கில் இடப்பட்டிருந்த ஒரு வேலை வாய்ப்பிற்கான விளம்பரத்தை பார்த்த பெண்மணி, அதில் ஆர்வம் கொண்டு, கொடுக்கப்பட்ட 'வாட்ஸ்அப்'
இணைப்பின் மூலம் (நம்பர்: 01162353665 - Bookassist Helpdesk) தொடர்பு கொண்டார். அவ்வேலை வாய்ப்பு 10 முதல் 35 சதவிகிதம் வரை கமிஷன் வழங்கும் என்றும் குறுகிய காலத்தில் அதிக வருமானம் கிடைக்கும் என்றும் கூறப்பட்டதால், அவர் ஆவலுடன் பணம் செலுத்தத் தொடங்கினார்.
Seorang wanita berusia 32 tahun dari Johor kehilangan RM54,950.59 akibat penipuan kerja dalam talian di Facebook. Mangsa tertarik dengan tawaran kerja berkomisen tinggi lalu berhubung melalui WhatsApp sebelum membuat pembayaran yang akhirnya membawa kepada kerugian besar.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *