ஜொகூர், உலக கல்வித் திட்டங்களுக்கு மாணவர்கள் பங்கேற்க தயாராக உள்ளது!

top-news
FREE WEBSITE AD

(கோகி கருணாநிதி)

ஜொகூர் பாரு, அக்.5-

ஜொகூர் தனது மாணவர்களுக்கு பயன் அளிக்கும் வகையில் அனைத்துலக கல்வித் திட்டங்களை நடத்தவும், ஆதரிக்கவும் தயாராக உள்ளதாக மாநிலக் கல்வி குழுத் தலைவர் அஸ்னான் தமீன் மற்றும் தகவல் ஆணையக்
மாணவர்கள் இத்தகைய அனைத்துலக நிகழ்வுகளில் பங்கேற்பது மிக முக்கியமானது. இது அவர்களின் உடல் இயக்கம், விளையாட்டு மற்றும் பாடத்திட்டத்திற்கு வெளியான மதிப்பீட்டில் உயர்ந்த மதிப்பெண்களைப் பெற்றுத் தருகிறது. இதன் மூலம் பல்கலைக்கழகச் சேர்க்கைக்கான வாய்ப்புகளும் அதிகரிக்கின்றன என்று அவர் அவர் கூறினார்.

சில மாணவர்கள் தங்கள் பள்ளிகளின் அனுப்புதலின் மூலம் அனைத்துலக நிகழ்ச்சிகளில் பங்கேற்று PAJSK மதிப்பெண்களை பெற்றுள்ளதாகவும், ஆனால் அதிக செலவுகள் காரணமாக பங்கேற்போர் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதாகவும் அஸ்னான் குறிப்பிட்டார்.

“இந்த நிலையை மாற்றும் நோக்கில் மாநிலம் நடவடிக்கை எடுக்கிறது. நான்கு அல்லது
ஐந்து மாணவர்கள் மட்டுமே மதிப்பெண்களைப் பெறுவதற்கு பதிலாக, ஆயிரக்கணக்கான மாணவர்கள் இதன் பயனை அடைய வேண்டும். சிங்கப்பூர் மற்றும் இந்தோனேசியாவுக்கு அருகாமையில் உள்ள நமது இடம், அனைத்துலக பங்கேற்பை எளிதாக்குகிறது." என அவர் சன்வே சிட்டியில் நடைபெற்ற இஸ்கண்டார் புத்ரி அனைத்துலக கல்வி விழா துவக்க விழாவில் உரையாற்றினார்.

PAJSK மதிப்பெண்கள், கல்வி அமைச்சகத்தின் வழிகாட்டுதலின் கீழ் பள்ளிகளில் நடத்தப்படும் பாடத்திட்டத்திற்கு வெளியான நடவடிக்கைகளுக்கான ஒருங்கிணைந்த மதிப்பீட்டு முறை.இது மைய பல்கலைக்கழகச் சேர்க்கை ஆணையத்தின் (UPU) வழியாக உயர் கல்விக்கான விண்ணப்பத்தில் தேர்வுத் தோற்றங்களுடன் சேர்ந்து கணக்கில் கொள்ளப்படுகிறது.

ஐந்து நாட்கள் நடைபெறும் EduFest, ஜொகூர் திறன் மேம்பாட்டு கவுன்சில் மற்றும் தத்தோ ஒன் நிறுவனம், மாநிலக் கல்வி துறை மற்றும் பல்வேறு நிறுவனங்களின் ஒத்துழைப்பில் மாநில அரசால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நிறுவன இயக்குநர் மொஹ்மட் கடாபி அப்து அஜிஸ் கூறியதாவது: “இந்த நிகழ்வு கல்வி அமைச்சகம் நிர்ணயித்த PAJSK அளவுகோல்களை பூர்த்தி செய்யும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. மாணவர்கள் அதிக சான்றிதழ்களைப் பெறுவதற்கான வாய்ப்புகளை வழங்குவது நமது நோக்கம். இது ஒரு வகையில் PAJSK-ஐ அனைத்து மாணவர்களுக்கும் ஜனநாயகமாக்குகிறது."

மேலும், அருகிலுள்ள காலகட்டத்தில் “ஜொகூர் இளைஞர் மாநாடு" போன்ற பல அனைத்துலக நிகழ்வுகளை நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும், “நவம்பரில் அதனை தொடங்குவதற்கான ஆயத்தங்கள் இறுதி கட்டத்தில் உள்ளன" என்றும் அவர் தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *