மாணவர் பகடிவதை விவகாரம்-கூட்டுக் குழு அமைக்கப்படும்!
- Muthu Kumar
- 30 Aug, 2025
புத்ராஜெயா, ஆக. 30-
மாணவர்களிடையே நிலவிவரும் பகடிவதைச் சம்பவங்களுக்கு ஒரு முடிவு கட்டுவதற்குச் சிறப்புப் பணிக்குழுவொன்றை அமைக்க அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. பள்ளிகளில் நிலவிவரும் சில பகடிவதைச் சம்பவங்கள் பொதுமக்களிடையே சினத்தை ஏற்படுத்தியிருக்கும் வேளையில் இக்குழு அமைக்கப்படவுள்ளது என்று தொடர்புத்துறை அமைச்சர் டத்தோ ஃபாமி பாட்சில் நேற்று தெரிவித்தார்.
அப்பணிக்குழுவுக்கு பிரதமர்துறை அமைச்சர் (சட்டம் மற்றும் துறைசார் சீர்திருத்தம்) டத்தோஸ்ரீ அஸாலினா ஒஸ்மான் சைட் தலைமையேற்பார். பல்வேறு அமைச்சுகள் மற்றும் முகமைகளின் பிரதிநிதிகளும் அதில் இடம்பெற்றிருப்பார்கள் என்று அவர் குறிப்பிட்டார். செயல்பாட்டு விதிமுறைகளை ஆராய்வதும் முறைமைப்படுத்துவதும் அக்குழுவின் பணிகளில் ஒன்றாக இருக்கும் என்று வாராந்திர அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் ஃபாமி கூறினார்.
பகடிவதை ஒழிப்பு தீர்ப்பாயமொன்றை அமைப்பதற்கும் டத்தோஸ்ரீ ஸெரலினா பரிந்துரை பள்ளிகளுக்கும் இதர பள்ளிகளுக்கும் செயல்பாட்டு விதிமுறைகளையும் பணிக்குழு தனது கவனத்தில் எடுத்துக் கொள்ளும் என்றார் அவர்.அக்குழு தனது முதல் கூட்டத்தை செப்டம்பர் 2ஆம் தேதி நடத்தும். கடந்த 2022ஆம் ஆண்டில் நாடு முழுவதும் உள்ள தொடக்கப் பள்ளிகளிலும் இடைநிலைப் பள்ளிகளிலும் மொத்தம் 3,883 பகடிவதைச் சம்பவங்கள் நடந்துள்ளன.
2023ஆம் ஆண்டில் அது 6,528ஆக உயர்வு கண்டது என்று கல்வியமைச்சின் முன்னாள் தலைமை இயக்குநர் கடந்தாண்டு டிசம்பரில் அறிவித்திருந்தார். இதனிடையே, கடந்தாண்டு ஜனவரி முதல் அக்டோபர் வரை 6,206 பகடிவதைச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன என்று அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
சபாவின் பாப்பாரில் சமய உறைவிடப் பள்ளியைச் சேர்ந்த பதின்மூன்று வயதான ஸாரா கைரினா என்ற மாணவி தனது தங்குவிடுதியின் மூன்றாவது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சர்ச்சைக்கு வித்திட்டது. பகடிவதையே அவரின் மரணத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



