சுகாதார செலவுகளை நிவர்த்தி செய்ய கூட்டு அமைச்சர் செயற்குழு!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூன் 19-

நாட்டில் அதிகரித்து வரும் சுகாதாரச் செலவுகளை நிவர்த்தி செய்வதற்காக, கூட்டு அமைச்சர் செயற்குழுவை அமைப்பதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்திருக்கின்றார்.

நிதி அமைச்சு, சுகாதார அமைச்சு மற்றும் பேங்க் நெகாரா மலேசியா ஆகிய தரப்புகளை உட்படுத்திய அச்செயற்குழு. தரமான சுகாதாரப் பராமரிப்பு அனைத்து மலேசியர்களுக்கும் மலிவு விலையிலும், அணுகக்கூடியதாகவும் இருப்பதை
உறுதிசெய்ய ஒன்றிணைந்து செயல்படும் என்றும் பிரதமர் கூறினார்.

"விளைவுகள், வெளிப்படைத்தன்மை மற்றும் நியாயத்தன்மைக்கு முன்னுரிமை அளிக்கும் மதிப்பு அடிப்படையிலான தனியார் சுகாதார அமைப்பை நோக்கி ஓர் அடிப்படை மாற்றத்தை மேற்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும். முக்கிய சீர்திருத்தங்களில் தெளிவான. விலை நிர்ணயம், வலுவான இலக்கவியல் சுகாதாரம் மற்றும் உலகளாவிய அடிப்படை மருத்துவ காப்புறுதி தயாரிப்புகள் போன்ற மலிவான தேர்வுகள் மூலம் விரிவாக்கப்பட்ட அணுகல் ஆகியவை அடங்கும்". என்றார் அவர்.

அரசாங்கத்தின் சீர்திருத்த முயற்சிகள் வெறும் ஒப்பனை அல்ல, அது கட்டமைப்பு அடிப்படையிலானது என்று கூறிய அன்வார், இரக்கம், நல்ல கொள்கை மற்றும் மக்களின் தேவைகளால் அது வழிநடத்தப்படுவதாகவும் தெரிவித்தார்.

Kerajaan menubuhkan jawatankuasa menteri bersama bagi menangani kos kesihatan yang meningkat. Ia melibatkan Kementerian Kewangan, Kesihatan dan Bank Negara bagi memastikan penjagaan kesihatan berkualiti, mampu milik serta mudah diakses untuk semua rakyat Malaysia.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *