PKR கட்சியின் 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசுக்கு கோரிக்கை!
- Shan Siva
- 24 Feb, 2026
கோலாலம்பூர்: PKR கட்சியைச் சேர்ந்த 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டத்துறை தலைவர் மற்றும் பொது வழக்கறிஞர்களுக்கான பதவிகளை பிரிக்கும் அரசியலமைப்பு திருத்த மசோதாவை, விரிவான ஆய்வுக்காக நாடாளுமன்ற சிறப்பு தெரிவுக்குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
பண்டான் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் Rafizi Ramli, இந்த அரசியலமைப்பு (திருத்தம்) மசோதா எண் 2 – 2026 அவசரமாக நிறைவேற்றப்படக் கூடாது என்று நாடாளுமன்றத்தில் இன்று
நடைபெற்ற கூட்டு செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறினார்.
இந்த மசோதா பரந்த விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது. அனைத்து
கட்சிகளின் கருத்துகளும் பெறப்பட்டு, விரிவாக
ஆய்வு செய்யப்பட வேண்டும் என்று
அவர் கூறினார்.
தற்போதைய வரைவு, சில
முக்கிய அதிகாரங்களை மிகக் குறைந்த கைகளில் குவிக்கும் அபாயம் உள்ளதாகவும்,
குறிப்பாக பிரதமரின் செல்வாக்கு நீதித்துறை மற்றும் சட்ட சேவை
ஆணைய நியமனங்களில் அதிகமாக இருக்கலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், பப்ளிக் புராசிகுயூட்டரான பொதுத்தரப்பு
வழக்கறிஞரை நியமிக்கும் மற்றும் நீக்கும் செயல்முறையில் நாடாளுமன்றத்திற்குத்
தெளிவான பங்கு வழங்கப்படவில்லை என்பது மற்றொரு கவலையாக முன்வைக்கப்பட்டுள்ளது.
வேட்பாளர் முதலில் நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் பொதுக்
கேள்வி–பதில் விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என்றும், பின்னர்
Dewan Rakyat-இல் பெரும்பான்மை வாக்குகளால்
உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும் ரஃபிசி பரிந்துரைத்தார்.
அதன்பின், உறுதிப்படுத்தப்பட்ட நபர் மாட்சிமை தங்கிய மாமன்னரிடம்
அதிகாரப்பூர்வ நியமனத்திற்காக
சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றார்.
பப்ளிக் புராசிகியூட்டரின் பதவிக்காலத்தை ஏழு ஆண்டுகளில்
இருந்து நான்கு ஆண்டுகளாக குறைக்கவும் அவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
அரசு தங்களின் பரிந்துரைகளை கவனத்தில் எடுத்தால் மட்டுமே ஆதரவு வழங்கப்படும் என்று ரஃபிசி தெரிவித்தார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



