தலைமை நீதிபதி நியமனத்தில் இறுதி நிமிட மாற்றமில்லை!
- Muthu Kumar
- 22 Jul, 2025
புத்ராஜெயா, ஜூலை 22
தலைமை நீதிபதி நியமனத்தில் இறுதி நிமிடங்களில் எந்தவொரு பெயர் மாற்றமும் ஏற்படவில்லை என்பதை பிரதமர் நேற்று திட்டவட்டமாகத் தெரிவித்தார். நீதித்துறையை அரசியலாக்கும் முயற்சியாக சில தரப்பினர் பல்வேறு அவதூறுகளைச் சுமத்துவதாக அவர் சாடியுள்ளார்.
"இது ஒப்புக் கொள்ளப்பட்டது. தொடக்கத்திலிருந்தே நாங்கள் முன்வைத்த பெயர். அதில் எந்த மாற்றமும் இல்லை. ஏன்? இப்போது இப்படி நடந்துவிட்டது. உண்மையில் கடைசி நிமிட மாற்றமில்லை என்பது சிலருக்குத் தெரியும்.
“இதை நம்பவில்லை என்றால் நீங்கள் சரிபார்க்கலாம். முன்வைக்கப்பட்ட பெயர் அதுதான். அந்த பெயர் இறுதியாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. எனவே, எந்த மாற்றமும் இல்லை. எவரும் சேர்க்கப்படவில்லை. இந்த நபர், அந்த டத்தோ என்று யாருமில்லை. இதுதான் உண்மை நிலைமை. நீதித்துறை அரசியலாக்கப்படக்கூடாது என்று நான் நினைக்கிறேன். அது நாட்டின் நீதி அமைப்பில் ஒரு தூண்' என்று அன்வார் தெரிவித்தார்.
பல்வேறு ஆரூடங்களுக்கு முன்பதாகவே நியமனத்திற்கான பரிந்துரை பட்டியல் சமர்ப்பிக்கப்பட்டு மாட்சிமை தங்கிய மாமன்னரால் அங்கீகரிக்கப்பட்டதாகவும் அன்வார் குறிப்பிட்டார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



