DAP விற்பனையாகிவிட்டது! – ராமசாமி
- Shan Siva
- 10 Jan, 2026
கோலாலம்பூர், ஜன 10: டிஏபி வேலை செய்ய எளிதான கட்சி என பகாங் மந்திரி பெசார் வான் ரோஸ்டி வான் இஸ்மாயில் பாராட்டியிருப்பது, டிஏபி தன் அடிப்படை நிலைப்பாடுகளை விற்றுவிட்டது என்பதையே உறுதிப்படுத்துகிறது என்று டிஏபி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பி. ராமசாமி தெரிவித்துள்ளார்.
நீண்ட காலமாக மலாய் அல்லாத மக்களின் குரலாக, குறிப்பாக சர்ச்சைக்குரிய விடயங்களில் பேசிவந்த டிஏபி, தற்போது தனது இலக்குகளில் இருந்து விலகி விட்டதாக அவர்
கூறினார்.
பகாங் மாநில அரசின் பல முயற்சிகளுக்கு, குறிப்பாக அரசுப் பணியாளர்களுக்கு நிதி உதவி வழங்கும்
விவகாரத்தில், எம்சிஏவைக்
காட்டிலும் டிஏபி நிர்வாக உறுப்பினர்கள் அதிக ஆதரவு அளித்ததாக வான் ரோஸ்டி கூறியிருந்தார். இதற்குப் பதிலளிக்கும்
விதமாக ராமசாமி இவ்வாறு கூறினார்.
வான் ரோஸ்டியின் பாராட்டு, டிஏபி எம்சிஏவுடன் ஒப்பிடும்போது பணிவுடன் நடந்துகொண்டதை குறிக்கலாம். இதன்
மூலம், டிஏபி மற்றொரு எம்சிஏவாக
மாறிவிட்டது என்பதும் உறுதியாகிறது, என்று ராமசாமி
FMT ஊடகத்தில் தெரிவித்துள்ளார்.
அரசியலில், முன்பு
எதிரியாக இருந்த ஒருவரிடமிருந்து கிடைக்கும் பாராட்டு, அந்தக் கட்சியின் அரசியல் நிலைப்பாட்டிலும் திசையிலும்
ஏற்பட்டுள்ள அடிப்படை மாற்றத்தை குறிக்கும் என்றும் அவர் கூறினார்.
மாநில அரசுப் பணியாளர்களுக்கு இரண்டு மாத சம்பளத்திற்கு
சமமான உதவி வழங்க விருப்பம் இருப்பதாக வான் ரோஸ்டி தெரிவித்தபோது, அதற்கு டிஏபி எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்பதையும் அவர்
நினைவுபடுத்தினார்.
ஒற்றுமை அரசில் டிஏபி மற்றும் அம்னோ “மனமில்லா கூட்டாளிகள்”
போல இருப்பதாகவும், ஆட்சி
கூட்டணியில் இருந்தாலும் இரு கட்சிகளுக்கிடையிலான உறவு கிட்டத்தட்ட சரியாக இல்லாத
நிலையில், இவ்வாறு ஒருவரை ஒருவர்
அணுகுவது வியப்பளிப்பதாகவும் ராமசாமி கூறினார்.
ஒற்றுமை அரசு உருவான பிறகு, இரு கட்சிகளுக்கிடையே பல மோதல்கள் ஏற்பட்டதாகவும், சமீபத்திய சர்ச்சையாக, டிஏபி பூச்சோங் எம்.பி. யியோ பீ யின், முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் வீட்டுக் காவல் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதை
கொண்டாட வேண்டிய விஷயம் என சமூக ஊடகத்தில் பதிவிட்டதையும் அவர்
சுட்டிக்காட்டினார்.
யியோ பீ யின் மன்னிப்பு கேட்க மறுத்ததையடுத்து, அம்னோ இளைஞர் பிரிவு சிறப்பு மாநாடு நடத்தி, அரசிலிருந்து விலக வேண்டும் என அதன் தலைவர் கோரிக்கை
விடுத்திருந்தார்.
இந்த இரு கட்சிகளும் சந்தர்ப்பவாத அரசியல் நடத்துகின்றன என
ராமசாமி குற்றம்சாட்டினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



