நட்பு நாடுகளின் உதவியுடன் 'கேப்டன் பிரபா' கும்பலுக்கு வலை வீசும் போலிஸ்!
- Shan Siva
- 10 Feb, 2026
கோலாலம்பூர்: ‘கேப்டன் பிரபா’ கும்பலுடன் தொடர்புடையதாக நம்பப்படும் மேலும் 15
பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
நட்பு நாடுகளின் உதவி மற்றும் ஒத்துழைப்புடன் தீவிர விசாரணைகள்
மூலம் போலீசார் பல சந்தேக நபர்களை அடையாளம் கண்டுள்ளதாக தேசிய காவல் துறைத் தலைவர் டத்தோஸ்ரீ முகமட் காலித்
இஸ்மாயில் தெரிவித்தார்.
கைதுகள் செய்யப்பட்டுள்ளதாகவும்,
மேலும் தொடர்புடைய பல நபர்கள அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர்
கூறினார்.
இதுவரை கிடைத்த முடிவுகள் ஊக்கமளிப்பதாக உள்ளன. மேலும் இதில் ஈடுபட்டதாக நம்பப்படும் 15
பேரை தாங்கள்
இப்போதும் பின்தொடர்கிறோம் என்று
அவர் புக்கிட் அமானில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



