ஒருவரை இழுத்துப்போட்டு தலையில் மிதிக்கும் போலிஸ்! வைரலாகும் வீடியோ! - காவல்துறை விளக்கம்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஏப் 21: சமூக வலைத்தளங்களில் வைரலான காணொளி ஒன்றில், ஒரு காவல்துறை அதிகாரியால் தனது மோட்டார் சைக்கிளிலிருந்து கீழே இழுத்துச் செல்லப்பட்ட நபர், போதைப்பொருள் உட்கொண்டுள்ளது கண்டறியப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கெடா, கூலிம் பகுதியில் உள்ள ஜாலான் சுங்கை உலர் சாலையில், நேற்று  காலை சுமார் 11 மணியளவில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் அந்த சந்தேக நபரைத் தடுத்து நிறுத்தியதாக கூலிம் மாவட்ட காவல்துறை துணைத் தலைவர் தெங்கு ஃபைசல் யெங் கூறினார்.

போலீசார் அவரைக் கைது செய்ய முயன்றபோது, ​​அவர் ஒரு அதிகாரியின் மோட்டார் சைக்கிளை உதைத்துத் திருப்பித் தாக்கிவிட்டுத் தப்பி ஓடிவிட்டார். சந்தேக நபர் போக்குவரத்து விதிக்கு எதிராகப் பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டி, மற்ற சாலைப் பயனாளிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தினார் என்று அவர் கூறியதாக பெர்னாமா செய்தி வெளியிட்டுள்ளது.

அதிகாரிகள் சந்தேக நபரை சுமார் 5 கி.மீ. தூரம் துரத்திச் சென்று கைது செய்ததாக தெங்கு ஃபைசல் கூறினார்.

சந்தேக நபரின் மோட்டார் சைக்கிளை சோதனையிட்டதில், கெத்தும்  ரக போதை திர்வம் இருப்பதாக நம்பப்படும் இரண்டு தெளிவான பிளாஸ்டிக் பைகள் கண்டுபிடிக்கப்பட்டன என்று அவர் கூறினார்.

சந்தேக நபருக்கு நடத்தப்பட்ட சோதனையில் மெத்தாம்பெத்தமைன் போதைப்பொருள்  உட்கொண்டு  இருப்பது உறுதியானது.

குற்றவியல் வழக்குகளில் முந்தைய குற்றப் பதிவுகளைக் கொண்ட 32 வயதான அந்த சந்தேக நபர், நீதிமன்றக் காவலில் வைப்பதற்கான விண்ணப்பத்திற்காக இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்.

சமூக ஊடகங்களில் பரவி வரும் 29 வினாடி காணொளியில், ஒருவர் தனது மோட்டார் சைக்கிளிலிருந்து கீழே இழுக்கப்படுவதும், அவரது தலை மிதிக்கப்படுவதும் காட்டப்பட்டது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *