போலீஸ் ஹெலிகாப்டர் விபத்து-விசாரணை அமலாக்கத் தரப்பிடம் ஒப்படைப்பு!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூலை 22-

ஜொகூரின் கேலாங் பாத்தா, சுங்கை புலாயில், இம்மாதம் 10ஆம் தேதி, அரச மலேசிய போலீஸ் படையின் (பிடிஆர்எம்) ஹெலிகாப்டர் விபத்து தொடர்பான விசாரணையை சம்பந்தப்பட்ட அமலாக்கத் தரப்பிடம் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சு ஒப்படைத்திருக்கிறது.

2025 மிட்சத்தோம் எனப்படும் பல தரப்பு அணுசக்தி பாதுகாப்பைக் கண்டறியும் பயிற்சியின்போது இவ்விபத்து நிகழ்ந்திருந்தாலும், விசாரணை செயல்முறையில் தமது அமைச்சு ஈடுபடாது என்று. அதன் அமைச்சர் சாங் லீ காங் தெரிவித்தார்.

"அப்பொறுப்பை நாங்கள் அமலாக்கத் தரப்பினரிடம் ஒப்படைத்துள்ளோம். இது அமைச்சின் பயிற்சியின்போது நடந்திருந்தாலும், இது அதன் வரம்பிற்குள் உட்பட்டிருக்கவில்லை. நாங்கள் விசாரணையில் ஈடுபடவில்லை" என்று, கோலாலம்பூரில் நேற்று நடந்த ஒரு நிகழ்ச்சியின்போது லீ காங் செய்தியாளர்களிடம் பேசும்போது தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *