சிலாங்கூர் முழுவதும் 79 பள்ளிகளில் காவல்துறை ஆய்வு!
- Shan Siva
- 27 Oct, 2025
ஷா ஆலம். அக் 27: மாணவர்களிடையே பாதுகாப்பு மற்றும்
ஒழுக்கத்தைப் பேணுவதற்கான தீவிர முயற்சிகளின் ஒரு பகுதியாக, சிலாங்கூர் காவல்துறை மாநிலம் முழுவதும் 79 பள்ளிகள் மற்றும் விடுதிகளில்
ஆய்வுகளை மேற்கொண்டுள்ளது.
கடந்த மூன்று
நாட்களாக மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் இதுவரை பெரிய பிரச்சினைகள் எதுவும்
கண்டறியப்படவில்லை என்றும், தவறான நடத்தைகளைத் தடுப்பதிலும் பாதுகாப்பான
கற்றல் சூழலை உறுதி செய்வதிலும் காவல்துறையின் முன்னெச்சரிக்கை அணுகுமுறையை இது
பிரதிபலிக்கிறது என்றும் மாநில காவல்துறைத் துணைத் தலைவர் முகமட் ஜைனி அபு ஹாசன்
தெரிவித்தார்.
மேலும், இந்த ஆண்டு சிலாங்கூர்
பள்ளிகளில் மொத்தம் 265 பகடிவதை சம்பவங்களும், 954 மாணவர் துஷ்பிரயோக சம்பவங்களும் பதிவு
செய்யப்பட்டுள்ளன.
பெரும்பாலான
வழக்குகள் பள்ளி மட்டத்தில் கையாளப்பட்டாலும், ஒன்பது பகடிவதை சம்பவங்கள் மற்றும் மாணவர்கள் சம்பந்தப்பட்ட
32 வன்முறை-குற்ற சம்பவங்கள் குறித்து போலீசார் விசாரணை ஆவணங்களைத் திறந்துள்ளதாகவும்
அவர் கூறினார்.
சிலாங்கூரின்
கிட்டத்தட்ட ஒரு மில்லியன் மாணவர் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது இந்த எண்ணிக்கை
சிறியதாகத் தோன்றலாம், ஆனால் ஒவ்வொரு சம்பவமும்
பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று அவர் தெரிவித்தார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



