ஸாரா கைரினா போலி உள்ளடக்கத்தை பதிவேற்றிய டிக்டாக் கணக்குபற்றி போலீஸ் விசாரணை!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஆக.17-

பகடிவதைக்கு உட்பட்டு மரணமடைந்த முதலாம் படிவ மாணவி ஸாரா கைரினா மகாதீர் தொடர்பில் தவறான மற்றும் நம்பகத்தன்மையற்ற உள்ளடக்கத்தை சமூக ஊடகத்தில் பதிவேற்றியதாக சந்தேகிக்கப்படும் ஒரு டிக்டாக் கணக்கை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

1948ஆம் ஆண்டு நிந்தனைச் சட்டம் செக்ஷன் 4(1), குற்றவியல் சட்டம் செக்ஷன் 505 (பி), 1998ஆம் ஆண்டு தொடர்பு மற்றும் பல்லூடக சட்டம் செக்ஷன் 233இன் கீழ் வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாக, புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர், டத்தோ எம். குமார் கூறினார்.

இணைய சேவை வசதிகளைத் தவறான முறையில் பயன்படுத்துவது. எந்தவொரு தரப்பினருக்கும் எதிராக வெறுப்பைத் தூண்டும் உள்ளடக்கங்களைப் பதிவேற்றம் செய்வது, பொதுமக்களுக்கு எரிச்சலையும் அச்சத்தையும் ஏற்படுத்துவது ஆகிய குற்றங்கள் அதில் அடங்குவதாக நேற்று வெளியிட்ட ஓர் அறிக்கை யில் டத்தோ குமார் குறிப்பிட்டிருந்தார்.

போலியான தகவல்களைப் பரப்புவது, போலீசின் விசாரணை செயல்முறைக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று, அவர் கூறினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *