காவல்துறை தீபாவளி! தலைநகரில் உற்சாக கொண்டாட்டம்!
- Shan Siva
- 12 Nov, 2025
கோலாலம்பூர், நவ 12: கோலாலம்பூர் போலிஸ் தலைமையகத்தில் தீபாவளி சிறப்பு விருந்துபசரிப்பு நேற்று வெகு சிறப்பாக நடைபெற்றது. தலைநகரில் உள்ள ஆறு மாவட்டத்தைச் சேர்ந்த போலீஸ் அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
ஒவ்வோர் ஆண்டும் கொண்டாடப்படும் காவல்துறையினரின் இந்த தீபாவளி
கொண்டாட்டம் இவ்வாண்டு கோலாலம்பூர் காவல்துறை தலைவர் டத்தோ ஃபாடில் மார்சுஸ் தலைமையில்
உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.
மூவினத்தைச் சேர்ந்த அதிகாரிகள் அனைவரும் இந்திய பாரம்பரிய உடையில்
வருகை தந்து ஒற்றுமையைப் பறைசாற்றினர்.
அனைவருக்கும் தமது தீபாவளி வாழ்த்துகளை டத்தோ ஃபாடில் மார்சுஸ்
தெரிவித்துக்கொண்டார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



