நாய் உயிரோடு தோலுரிக்கப்பட்ட கொடூரம் போலீசார் விசாரணைத் தொடங்கினர்!

top-news
FREE WEBSITE AD

மலாக்கா, ஆக. 19

மலாக்காவின் குரூபோங் தொழிற்பேட்டையில், ஒரு நாய் உயிரோடு தோலுரிக்கப்பட்ட கொடூரச் செயல் குறித்து மலாக்கா போலீசார் விசாரணையை தொடங்கி இருக்கின்றனர்.

அக்கொடூரச் சம்பவம் தொடர்பில் போலீசார் கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகலில், விலங்குகள் நலம் சார்ந்த அரசு சாரா அமைப்புகளிடமிருந்து புகார் ஒன்றைப் பெற்றதாக, மலாக்கா தெங்ஙா போலீஸ் தலைவர் கிரிஸ்தோப்பர் பட்டிட் தெரிவித்தார்.

ஒரு நாய் மிக மோசமான அளவில் காயமடைந்திருக்கும் தகவலைப் பெற்ற பின்னர், அந்த அமைப்புகள் அன்றைய தினம் பிற்பகல் 3 மணியளவில் சம்பவ இடத்திற்குச் சென்றதாகவும் அவர் தெரிவித்தார். "துன்புறுத்தலினால் உடல் மற்றும் கழுத்துப் பகுதிகளில் அந்த நாய் கடுமையாக காயமடைந்திருப்பதை அவர்கள் கண்டு பிடித்தனர். அப்பகுதியில் உள்ள தெரு நாய்களுக்கு உணவளிப்பதற்காக அவ்வப்போது அங்கு சென்று வரும் ஒருவர், சிகிச்சைக்காக அந்த நாயை கால்நடை கிளினிக்கிற்கு கொண்டு சென்றிருக்கின்றார்.

"ஆனால், காயங்களும் தொற்று நோயும் மிகவும் கடுமையாக பரவி இருந்தன. அதனால், அந்நாய் தொடர்ந்து சித்திரவதையை அனுபவிப்பதை தவிர்ப்பதற்காக, கால்நடை மருத்துவரின் அறிவுரையின்படி அது ஊசி மூலம் கருணைக் கொலை செய்யப்பட்டது என்று நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவில் அவர் தெரிவித்தார்.

விலங்குகள் சித்திரவதை செய்யப்படும் சம்பவங்களை அதிகாரத் தரப்பினர் மிகக் கடுமையானவையாக பார்ப்பதாகக் கூறிய அவர். இச்சம்பவம் குறித்து முழு விசாரணை செய்யப்படும் என்றார்.கீழ் விசாரணை செய்யப்படும் குற்றம் நிரூபிக்கப்பட்டால் 20 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வெள்ளி வரைக்குமான அபராதம் மற்றும் மூன்றாண்டு சிறை அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்யும் விலங்குகள் நலச் சட்டத்தின் என்றும் அவர் தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *