கட்டிடத்தில் இருந்து விழுந்து போலிஸ் அதிகாரி மரணம்! போலிஸ் விசாரணை

top-news
FREE WEBSITE AD

ஷா ஆலம், மே 20: இன்று அதிகாலை, ஷா ஆலம், செக்ஷன் 14-ல் உள்ள ஒரு கட்டிடத்திலிருந்து தவறி விழுந்ததாக நம்பப்படும் மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.

உயிரிழந்தவர், சிலாங்கூர் காவல்துறை தலைமையகத்தின் குற்றப் புலனாய்வுத் துறையைச் சேர்ந்த மூத்த அதிகாரி என்று சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் ஷாசெலி கஹார் கூறினார்.

அதிகாலை 3.07 மணிக்கு இந்தச் சம்பவம் குறித்த தகவல் ஷா ஆலம் காவல்துறை தலைமையகத்திற்குக் கிடைத்ததாகவும், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டதாகவும் ஷாசெலி கூறினார்.

பிரேதப் பரிசோதனை அறிக்கை வரும் வரை, இந்த வழக்கு திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது, என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

சிலாங்கூர் காவல்துறை, அந்த அதிகாரியின் குடும்பத்தினருக்குத் தங்கள் இரங்கலைத் தெரிவித்ததோடு, இவ்விஷயம் குறித்து பொதுமக்கள் யூகங்கள் செய்ய வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *