எல்ஜிபிடி நிகழ்ச்சி நடத்த திட்டம்: 2 பிஎஸ்எம் உறுப்பினர்களிடம் போலீசார் விசாரணை

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூன் 5-

ஓரினச் சேர்க்கையாளர்கள், திருநங்கைகள் (எல்ஜிபிடி சம்பந்தப்பட்ட நிகழ்ச்சியொன்றை நடத்தத் திட்டமிட்டதாகக் கூறப்படும் மலேசிய சோஷலிச கட்சியின் (பிஎஸ்எம்) இளைஞர் பகுதியைச் சேர்ந்த இரண்டு உறுப்பினர்களிடம் போலீசார் நேற்று விசாரணை நடத்தினர்.

புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தில் பிற்பகல் 3மணிக்கு அவர்களிடமிருந்து வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது என்று வழக்கறிஞர் ராஜசூரியன் பிள்ளை தெரிவித்தார்.

குற்றப் புலனாய்வுத்துறையின் ரகசிய குற்றவியல் விசாரணைப் பிரிவினரால் அவர்கள் விசாரிக்கப்பட்டனர் என்று கூறப்படுகிறது.எல்ஜிபிடி நிகழ்ச்சி நடத்தும் திட்டத்தை எதிர்த்து 188 புகார்கள் செய்யப்பட்டுள்ளன என்று புக்கிட் அமானின் குற்றப் புலனாய்வுத்துறையின் இயக்குநர் ஷூஹாய்லி ஸைன் நேற்றுமுன்தினம் கூறியிருந்தார்.

அந்தப் பயிலரங்கு நிகழ்ச்சியை ரத்து செய்யும்படி பிஎஸ்எம் கட்சியைத் தாங்கள் வலியுறுத்தியிருப்பதாக சமய விவகார அமைச்சர் நயீம் மொக்தார் கடந்த வாரம் அறிவித்திருந்தார்.

இதுபோன்ற நிகழ்ச்சிகள் மூடிய கதவுகளுக்குப் பின்னால் நடத்தப்பட்டாலும் பெரும்பான்மை மக்களின் சமூக பழக்க வழக்கங்களுக்கும் சமய விழுமியங்களுக்கும் அவை சவால் விடுவதாக உள்ளன என்று அவர் கூறியிருந்தார்.

Dua ahli Pemuda Parti Sosialis Malaysia (PSM) disoal siasat polis di Bukit Aman berhubung dakwaan penganjuran acara berkaitan LGBT. Polis menerima 188 laporan terhadap acara itu. Menteri Agama telah meminta supaya program tersebut dibatalkan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *