அக்மாலிடம் போலீஸார் வாக்குமூலம் பதிவு செய்தனர்
- Shan Siva
- 16 Aug, 2025
கோலாலம்பூர், ஆக 16: கடந்த வியாழக்கிழமை பினாங்கின் கப்பாலா பத்தாஸில்
டாக்டர் அக்மல் சலே ஏற்பாடு செய்த கூட்டம் தொடர்பாக போலீசார் அவரிடம் வாக்குமூலம்
பதிவு செய்துள்ளனர்.
அம்னோ இளைஞர்
பிரிவுத் தலைவருமான அக்மால் இன்று அதிகாலை 1.25 மணிக்கு கோலாலம்பூரில் உள்ள டாங்
வாங்கி மாவட்ட காவல் தலைமையகத்தில் (IPD) தனது வாக்குமூலத்தை அளித்ததாக பெர்னாமா தெரிவித்துள்ளது.
அவர்
தேசத்துரோகச் சட்டம் 1948 இன் பிரிவு 4(1), தண்டனைச் சட்டத்தின் பிரிவு 506 மற்றும் தகவல் தொடர்பு
மற்றும் பல்லூடகச் சட்டம் 1998 இன் பிரிவு 233 ஆகியவற்றின் கீழ் விசாரணையை
எதிர்கொள்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



