வங்சா மாஜு பல்கலைக்கழகம் அருகே கத்திக் குத்து! ஆடவரைத் தேடும் போலீஸ்
- Shan Siva
- 17 Jul, 2026
கோலாலம்பூர்:
வாங்சா மாஜுவில் உள்ள ஒரு
பல்கலைக்கழகம் அருகே பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தபோது, ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்படுவதைக்
காட்டும் வைரல் வீடியோ குறித்து காவல்துறை விசாரித்து வருகிறது.
பாதிக்கப்பட்டவரிடமிருந்து
காவல்துறைக்கு புகார் வந்ததாக வாங்சா மாஜு மாவட்ட காவல்துறைத் தலைவர் உதவி ஆணையர்
அன்னாஸ் சுலைமான் உறுதிப்படுத்தினார்.
தண்டனைச்
சட்டத்தின் 324-வது பிரிவின்
கீழ் விசாரணை ஆணை பதிவு செய்யப்பட்டுள்ளது, இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்று அவர் கூறினார்.
அந்த வைரல்
வீடியோவில், கருப்பு உடை
அணிந்த ஒருவர் கூர்மையான ஆயுதத்துடன், வெள்ளை உடை அணிந்த ஒருவரை திடீரெனத் தாக்கி, பலமுறை உதைத்தும் குத்தியும் தாக்குவது தெரிகிறது.
இந்தச்
சம்பவத்தின்போது பாதிக்கப்பட்டவருக்குக் காயங்கள் ஏற்பட்டிருக்கலாம் என
நம்பப்படுகிறது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



