ஸாரா மரணத்தில் போலீசார் தீவிர விசாரணை அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்!
- Muthu Kumar
- 14 Aug, 2025
(இரா.கோபி)
கோலாலம்பூர், ஆக 14-
மறைந்த ஸாரா கைரினா மகாதீரின் மரணம் தொடர்பான விசாரணை விண்ணப்பம் அடுத்த வார தொடக்கத்தில் மரண விசாரணை அதிகாரியிடம் சமர்ப்பிக்கப்படும் என்று மலேசிய காவல்துறை எதிர்பார்ப்பதாக புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ எம்.குமார் எஸ்.முத்துவேலு தெரிவித்தார்.
இந்த வழக்கு நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்படுவதற்கு முன்பு இந்த செயல்முறை பரிந்துரைக்கப்பட்ட சட்ட வழியாக பரிசீலனை செய்யப்பட வேண்டும் என்று அவர் புக்கிட் அமானில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
விசாரணையின் ஒவ்வொரு கட்டமும் நடைமுறைகளுக்கு இணங்குவதை உறுதி செய்வதற்கும், இந்த வழக்கில் நீதியைப் பெறுவதற்கு நீதிமன்றத்திற்கு முழு ஒத்துழைப்பை வழங்குவதற்கும் மலேசிய காவல்துறை உறுதிபூண்டுள்ளது என்று எம்.குமார் கூறினார்.
புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை சிறப்புப் பணிக்குழு, ஆரம்ப கட்டத்தில் விசாரணை அதிகாரி பிரேத பரிசோதனை கோரத் தவறியதே, மறைந்த ஸாரா கைரினா மகாதீரின் மரணத்தில் நிலையான செயல்பாட்டு நடைமுறை பின்பற்றப்படாததற்கான முக்கிய காரணமாக அடையாளம் காணப்பட்டுள்ளது என்பதைக் கண்டறிந்துள்ளது.
புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ எம்.குமார் கூறுகையில், மரணத்திற்கான காரணம் தெரியவில்லை அல்லது சந்தேகத்திற்கிடமான கூறுகள் இருந்தால், பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று செயல்பாட்டு நடைமுறை (எஸ்ஓபி) தெளிவாகக் கோருகிறது என்றார்.
சட்டத்தின் கீழ் அதிகாரம் இருந்தபோதிலும், விசாரணை அதிகாரி கோரிக்கை வைக்கவில்லை என்பது சிறப்புப் பணிக்குழுவின் விசாரணையில் கண்டறியப்பட்டது. விசாரணை அதிகாரி, அவரது மேற்பார்வையாளர் தனது பொறுப்புகளை நிறைவேற்றத் தவறியதற்காக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இது சார்ந்த தகவல்களும் விசாரணையில் உள்ளது என்றும் எம். குமார் கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



