மாணவி ஷாராவின் மரண வழக்கு விசாரணை ஆவணங்கள் அடுத்த வாரம் ஏஜிசியிடம் போலீசார் சமர்ப்பிக்க உள்ளனர்!
- Muthu Kumar
- 04 Aug, 2025
கோலாலம்பூர், ஆக. 4-
மாணவி ஷாராவின் மரணவழக்கு விசாரணை ஆவணங்கள் அடுத்த வாரம் ஏஜிசியிடம் போலீசார் சமர்ப்பிக்க உள்ளனர் என உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் கூறினார்.
முதலாம் படிவ மாணவி ஷாரா கைரினா மகாதீரின் மரணம் தொடர்பான விசாரணையை போலீசார் முடித்து விட்டனர்.
விசாரணைக்கு உதவ சுமார் 60 சாட்சிகள் அழைக்கப்பட்டுள்ளனர். அனைத்து விசாரணையும் முடிந்தது.
அடுத்த வாரத்திற்குள் போலீசார் விசாரணை ஆவணங்களை மேலதிக நடவடிக்கைகளுக்காக சட்டத்துறை தலைவர் அலுவலகத்திற்கு (ஏஜிசி) சமர்ப்பிப்பார்கள் என நினைக்கிறேன் என்று அவர் கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



