கெஅடிலானில் உள்ள அரசியல் எதிரிகள் என்னை கோபக்காரன் என்று முத்திரை குத்துகிறார்கள்!
- Muthu Kumar
- 30 Sep, 2025
கோலாலம்பூர், செப். 30-
கெஅடிலானில் உள்ள அரசியல் எதிரிகள் என்னை கோபக்காரன் என்று முத்திரை குத்துகிறார்கள் என்று அக் கட்சியின் முன்னாள் துணைத் தலைவர் ரஃபிசி ரம்லி கூறினார்.
கெஅடிலான் கட்சியில் நான் ஒரு மோசமானவன் அல்லது பேசுவதற்கு கடினமானவன் என்ற கூற்றுகளை நிராகரிக்கிறேன். மேலும் இந்த முத்திரை கெஅடிலான் கட்சியில் ஏமாற்றமடைந்த உறுப்பினர்களிடம் இருந்து வருகிறது.அவர்கள் எனது அரசியல் நிலைப்பாட்டில் அதிருப்தி அடைந்துள்ளனர்.
பிரதமரும் கெஅடிலான் தலைவருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், பாஸ் அல்லது பெர்சத்து ஆகியோரிடமிருந்து மாறுபட்ட கருத்துகள் இருந்தபோதிலும், தான் எப்போதும் வெளிப்படையாகப் பேசுவதாக ரஃபிசி வலியுறுத்தினார்.
மேலும் நான் கோபப்படுவதாகச் சொல்வது கட்சிக்குள் இருக்கும் ஒரு சில அரசியல் எதிரிகள் மட்டுமே என்று நான் நினைக்கிறேன்.
அதை நான் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை என்று அவர் கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



