சரிந்த பாறைகள்... சேதமுற்ற 6 வாகனங்கள்! தலைநகரில் அதிர்ச்சி

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், நவ 4: கோலாலம்பூர், அம்பாங புக்கிட் பெர்மாயில் உள்ள முத்தியாரா அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று காலை இரண்டு தனித்தனி பாறைகள் சரிந்து விழுந்ததில் ஆறு வாகனங்கள் சேதமடைந்தன.

முதல் சம்பவம் காலை 8.15 மணிக்கும், இரண்டாவது சம்பவம் காலை 8.50 மணிக்கும் அடுக்குமாடி குடியிருப்புகளின் வாகன நிறுத்துமிடத்தில் நடந்ததாக அம்பாங் ஜெயா காவல்துறைத் தலைவர் அசாம் இஸ்மாயில் தெரிவித்தார்.

சம்பவ இடத்தில் நடத்தப்பட்ட விசாரணையில், மலைச்சரிவில் இருந்து பாறைகள் வாகன நிறுத்துமிடத்தில் விழுந்திருப்பது கண்டறியப்பட்டது.

இந்த சம்பவத்தால் ஆறு வாகனங்கள் சேதமடைந்ததாகவும், உயிரிழப்பு எதுவும் இல்லை என்றும் அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

அம்பாங் ஜெயா நகராட்சி மன்றம் பாறைகள் மற்றும் மண்ணை அகற்ற கனரக இயந்திரங்களைப் பயன்படுத்தி சுத்தம் செய்யும் பணியை மேற்கொண்டதாக அசாம் கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *